நியூயார்க்: பா.ஜ.,வினரிடம் கேள்வி கேட்டால் காங்கிரஸ் மீது பழிபோடுவதையே வழக்கமாக கொண்டுள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், நியூயார்க்கில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசியதாவது: நீங்கள் பா.ஜ.,விடம் எதைக் கேட்டாலும் அதனை கடந்து செல்லக் கூடியதாக பார்க்க முடியும். ஒடிசா ரயில் விபத்து குறித்து பா.ஜ.,வினரிடம் கேள்வி கேளுங்கள். 50 ஆண்டுகளுக்கு முந்தைய காங்கிரஸ் மீது பழிபோடுவார்கள். பா.ஜ.,வினரிடம் இருக்கும் உடனடியான ஒரு பதில் என்ன தெரியுமா? வரலாற்றை பாருங்கள் என்பதுதான். பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., இரண்டுமே மற்றவர்கள் மீது பழிபோடுகிற போக்கைக் கொண்டவை.
முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் ரயில் விபத்துகள் நிகழ்ந்தால் அமைச்சர்கள் உடனடியாக பதவி விலகுவர். தார்மீகப் பொறுப்பேற்று மத்திய அமைச்சர் பதவி விலகுவதுதான் முறையானது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன; அதற்காக ஆங்கிலேயர் ஆட்சிதான் காரணம் என கூறி காங்கிரஸ் அரசு தப்பித்துக் கொள்ள முயற்சிக்கவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., பிரதமர் மோடி என யாராக இருந்தாலும் எதிர்கால திட்டங்கள் பற்றி பேசமாட்டார்கள். கடந்த காலங்களையே குறை சொல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

என்.ஆர்.ஐ.,
இன்னொருவர் மீது பழிபோட்டுவிட்டு தப்பிப்பதையே வழக்கமாகவும் கொண்டுள்ளனர். நவீன இந்தியாவை உருவாக்கியதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.,-க்கள்) பங்கு முக்கியமானது. மகாத்மா காந்தி ஒரு என்.ஆர்.ஐ., தான். நேரு, அம்பேத்கர், வல்லபாய் பட்டேல், சுபாஷ் சந்திரபோஸ் அனைவரும் என்.ஆர்.ஐ.,க்கள்தான். பல்வேறு சித்தாந்தங்களை கொண்டவர்களாக இருந்த போதும் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். இதனைத்தான் இந்திய சமூகத்திடமும் நான் எதிர்பார்க்கிறேன். இவ்வாறு ராகுல் பேசினார்.
வாசகர் கருத்து (49)
ஜாபர் ஷெரீப் மாதிரி ஆட்களை ரெயில் மந்திரியாக நியமித்தார்கள் ..பிறகு மம்தா லாலு போன்ற அறிவுக்கொழுந்துகள் ..
இவரின்பேச்சு இவரின் தரத்தை குறிக்கிறது . எதை எங்கு பேச வேண்டுமோ அதை அங்கு பேச வேண்டும் . குறைகள் பல இருந்தாலும் காங்கிரசும் சில நல்ல தலைவர்களையும் ,திட்டங்களையும் நாட்டுக்கு கொடுத்து இருக்கிறது . அதை போன்றே தற்போதைய ஆட்சியிலும் பல நல்ல திட்டங்களும் தலைவர்களும் உள்ளனர் .நல்லவைகளை பாரத்துவதும் தவறுகளை சரியான முறையில் சுட்டிக் காட்டினால் ஆளும் கட்சியினரும் திருத்திக்கொள்ள வாய்ப்பு உண்டு . அதை விடுத்தது மற்ற நாட்டில் சென்று சொந்த நாட்டுக்கு பிரச்சனையை பேசுவது பேடித்தனம் . இவரின் அப்பா அப்படி இல்லையே . இவரை யாரோ தவறான வழியில் செல்ல தூண்டுகிறார்கள் .
சரி பப்பு இத அமேதி மக்கள் கிட்ட சொல்லாம கோழை மாதிரி வயநாடு ஏன் ஓடின ?
பதவி விலகுவது மாதிரி டிராமா பண்ணுவார்கள். ஒருபோதும் உண்மையில் பதவி விலகியது கிடையாது. முதலில் ராஜினாமா செய்வார். பின்னர் சோனியா காந்தி பண்ணக்கூடாது என்பார். உடனே ராஜினாமாவை வாபஸ் பெற்றுக்கொள்வார். பேசாமல் புளி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.
காங்கிரஸ் வசம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு மக்கள் நிம்மதியாக வாழலாம் வீட்டில் மின்சாரம் இலவசம், காஸ் விலை குறைவு. அரசி கோதுமை தேவையான அளவு Free இல்லத்தரசிகள், வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகை பஸ் பயணம் இலவசம் மத்தியில் ஆட்சி அமைத்தால் ரயில் பயணமும் இலவசம் இரயில் விபத்து நடக்கவே நடக்காது விமான விபத்தும் இருக்காது அப்படி ஏதும் நடந்தால் பிரதமர் ராகுல்ஜியை தவிர அனைவரும் ராஜினாமா செய்வர் பிறகு அனைத்து அமைச்சர்களும் யார் என்று மேலிடம் முடிவு செய்யும் எல்லா கேள்விகளுக்கும் பதில் பிரதமரே சொல்வார். சீனா, பாகிஸ்தான் இவர் பிரதமர் ஆனதைக் கண்டு, மலைத்துப் போய் தனது படைகளையும் எல்லைகளையும் சுருக்கிக் கொண்டு விடும் மணிப்பூர் மட்டும் என்ன, மொத்த இந்தியாவும் அமைதிப் பூங்கா ஆகிவிடும் 😁