"தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்": வானிலை மையம் கணிப்பு

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை:
மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் இன்றும்(ஜூன் 05), நாளையும்(ஜூன் 06) அதிகபட்ச வெப்பநிலை 40- 42 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். ஒரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்றும்(ஜூன் 05), நாளையும்(ஜூன்06) சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அப்போ இதுவரை குளு குளுன்னா இருந்தது.