ADVERTISEMENT
சென்னை: அக்னி நட்சத்திரம் முடிந்தும், பல மாவட்டங்களில் தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வருவதால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 14ம் தேதியும், 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 12ம் தேதியும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கோடை காலமாகும். இந்தாண்டு மார்ச் துவக்கத்தில் இருந்தே கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. மார்ச் மாத 2வது வாரத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரிக்க தொடங்கியது. ஏப்ரல் மாதத்தில் கணிசமான வெயில் பதிவு இருந்தது. கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திர காலம் முடிந்ததும் வழக்கமாக வெப்பம் குறையும். ஆனால், கடந்த 28ம் தேதி அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகுதான் வெயிலின் உக்கிரம் அதிகரித்துள்ளது. பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் இருந்தது.

கோடை விடுமுறை முடிந்து, ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம். அதன்படி தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரையில் ஜூன் 5ம் தேதியும், 6 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில், ஜூன் 1ம் தேதியும் திறப்பதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. வெயிலின் காரணமாக பள்ளிகள் திறப்பை 7ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக பள்ளிக்கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 14ம் தேதியும், 6 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 12ம் தேதியும் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (8)
எந்த வருஷம் ஜூன் அப்பிடின்னு சொன்னமா?
ஐயையோ இந்த ஆம்பள பசங்களோட அட்டகாசம் தாங்க முடியல. அவங்களுக்கு வெயிலே தெரியாது. நாள் பூரா கிரிக்கெட் விளையாடுறாங்க. அதுவும் அப்பார்ட்மெண்ட்ல 10 பசங்க கார் பார்க்கிங் இடத்துல கிரிக்கெட் விளையாடி ஒரே சத்தம் போடுறாங்க. மதிய நேரத்தில் நிம்மதியே இல்லை, ஸ்கூல் திறந்தால் தான் விடிவு காலம். சூரிய பகவான் கருணை காட்ட வேண்டும்,
Adda ponga
வெயிலின் தாக்கத்திலிருந்து மாணவர்கள் அடுத்த ஒரு வாரமாவது தப்பினர். ஜூலை 15 வரை இதே நிலைதான்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாத்தியார்களுக்கு கொண்டாட்டம் தனியார் பள்ளி காலாண்டு வரை எல்லா சனிக்கிழமை வேலைநாள் வைத்து பாடங்களை முடித்து விடுவார்கள் அரசு பள்ளி கதி தெரிந்த ஒன்று இவங்களுக்கு சம்பளம் ஜெரிக்கவே ஜெரிக்காது