ADVERTISEMENT
புவனேஸ்வர்: ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்தில் 51 மணிநேர சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு ரயில் சேவைகள் மீண்டும் துவங்கியது. இதன் பிறகு, எங்களது கடமை இன்னும் முடியவில்லை என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் சுமார் 51 மணி நேர சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு ரயில் சேவைகள் மீண்டும் துவங்கப்பட்டது. சீரமைக்கப்பட்ட பாலசோர் வழித்தடத்தில் சரக்கு ரயில் இயக்கப்பட்டதை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து பயணிகள் ரயிலும் இயக்கப்பட்டது. தொடர்ந்து விபத்து நடந்த இடத்தின் வழியாக வந்தே பாரத் ரயிலும் கடந்து சென்றது.
விபத்துக்கு காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை அறிக்கைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும். ரயில் விபத்தை சிபிஐ விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் 275 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் சுமார் 51 மணி நேர சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு ரயில் சேவைகள் மீண்டும் துவங்கப்பட்டது. சீரமைக்கப்பட்ட பாலசோர் வழித்தடத்தில் சரக்கு ரயில் இயக்கப்பட்டதை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து பயணிகள் ரயிலும் இயக்கப்பட்டது. தொடர்ந்து விபத்து நடந்த இடத்தின் வழியாக வந்தே பாரத் ரயிலும் கடந்து சென்றது.
சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த பின் பாலசோரில் பேட்டியளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், எங்களது கடமை இன்னும் முடியவில்லை. ரயில் விபத்தில் தொடர்பில் இல்லாமல் இருப்பவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்., விரைவில் அவர்களை மீட்டு குடும்பத்துடன் மீண்டும் ஒப்படைப்பதே எங்களின் நோக்கம்.
வாசகர் கருத்து (12)
மீட்புப்பணியை மத்திய ரயில்வே அமைச்சரே மூன்று நாட்களாக அங்கேயே தங்கி திறமையாக செய்துகொண்டிருக்கிறார். அவரை பாராட்டாமல் இருந்தாலும் பரவாயில்லை. அவர் மீது குறை கூறுவதை நிறுத்துங்கள். அசிங்க அரசியல் செய்யாதீர்கள். விபத்துக்கு பொறுப்பு ஏற்று அவர் பதவி விலகியிருக்கவேண்டும் என்று கூறுவது சரியல்ல. அவர் பதவி விலகிவிட்டால், எல்லாம் சரியாகிவிடுமா? பதவி விலகல் எதிர்பார்ப்பு, என்ன பேத்தல் எண்ணம்.
இதற்காக நாங்கள் வெட்கப்படுகிறோம் வேதனைப்படுகிறோம் ரயில் சேவைத்துவங்கியது முக்கியமில்லை உயிர் இருப்பவர்களையே பிணவறையில் தள்ளியது மிகவும் கண்டிக்கத்தக்கது
வரலாறு காணாத இந்த விபத்துக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்யுங்க ஐயா
வந்துட்டுப்போகச் சொல்லுங்க.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
கஷ்டம் தான், அதை விவரிக்க வார்த்தை இல்லை, ஈடு குடுக்க முடியாத இழப்பு இது. ஆனால் யாரும் வேணும் என்று செய்திடவில்லை, ஒம்பது வருடங்கள் கடந்த இப்பொழுது விபத்து நடந்து இருக்கு. காரணம் இன்னும் தெரியவில்லை இவ்வளவு நாள் இல்லாமல் இப்பொழுது ஒன்னு நடந்து இருக்கு என்றால். பொறுமை அவசியம்.