ADVERTISEMENT
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அடுத்தடுத்து இரண்டு கடைகளில் திருட்டு நடைபெற்றுள்ளது. திருட்டில் ஈடுபட்ட நபரின் காட்சிகள் சிசிடிவி பதிவாகியுள்ளதால், திருடனை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா புத்தூர் கடை வீதியில் உள்ள ஒரு காய்கறி கடையின் முன்பக்க ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் நேற்று முன்தினம் இரவு கடையில் கல்லாவில் இருந்த ரூ.3 ஆயிரத்தை திருடி சென்றார். அதேபோல் அருகில் உள்ள ஒரு கோழிக்கடையிலும் அதே மர்ம நபர் ரொக்க பணத்தை திருடி சென்றார். இந்த இரண்டு கடைகளிலும் மர்ம நபர் உள்ளே நுழைந்து திருடும் காட்சிகள் சிசிடிவி.,யில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளிடத்தில் இருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் புத்தூர் கடை வீதியில் அடுத்தடுத்து இரண்டு கடைகளில் திருட்டு சம்பவம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீணாய் போன திருடர்கள், காய்கரி கடை, கோழிக்கடைகாரர்களெல்லாம் கோட்டீஸ்வர்களா ? அவர்களே வயிற்று பிழைப்பு தொழில் நடத்துகிறார்கள். கரூர்ல போய் ராத்திரியில் எந்த வீட்டை உடைத்தாலும் கோடிக்கணக்கா அள்ளலாம். ஹாஹாஹா...