ADVERTISEMENT
திருப்பூர்: காஷ்மீரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீசாரதாம்பாள் கோயில் கும்பாபிஷேக விழா இன்று (5ம் தேதி) நடைபெற்றது. சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீவிதுசேகர பாரதீ சன்னிதானம் காலை 9:00 மணிக்கு கும்பாபிஷேக பூஜைகளை நடத்தி வைத்தார். முன்னதாக பிரதிஷ்டை செய்யப்படும் ஸ்ரீசாரதாம்பாள் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.
பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு வழிபாடு இல்லாமல் சிதிலமடைந்த ஸ்ரீசாரதா கோயில், தற்போது இந்திய எல்லைக்குள் புண்ணிய பூமியில் ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஹிந்துக்கள் மீண்டும் காஷ்மீர் ஸ்ரீசாரதாதேவியை வழிபடும் பாக்கியம் கிடைக்கும்; ஸ்ரீசாரதாம்பாளின் அருளாட்சி நாட்டுக்கே நல்வழியை காட்டுமென, பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதிய விக்ரகம் புறப்பாடு;
காஷ்மீர் சர்வஞ்ஞ பீடத்தில் கட்டப்பட்டுள்ள கோயிலுக்கு ஸ்ரீசாரதாம்பாள் பஞ்சலோக விக்ரகம் சிருங்கேரியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. காஷ்மீர் சாரதா யாத்திரை ஆலய கமிட்டியின் ரவீந்திர பண்டிட் உட்பட அனைத்து உறுப்பினர்களும் சிருங்கேரியில் விக்ரகத்தை பெற்றுக்கொண்டனர். முன்னதாக பாரதீ தீர்த்த சுவாமிகள் விக்ரகத்துக்கு தீபாராதனை செய்து வழிபட்டார். ஸ்ரீசாரதாம்பாள் விக்ரகம் இந்தியா முழுவதும் அலங்கரித்த வாகனத்தில் யாத்திரை சென்றது.
வாசகர் கருத்து (2)
நமோ சாரதாம்பா புண்ணிய பூமியான பாரதத்தில் சாரதாம்பிகையின் அருள் தழைக்க வேண்டும் ...
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீர் கொஞ்சம் கொஞ்சமா இந்தியாவுடன் இணையும் ...