அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள, அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டினுக்கு, டில்லியில் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ராணுவ படையினர் அளித்த அணிவகுப்பு மரியாதையை அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் ஏற்றுக் கொண்டார்.
வரும் ஜூன் 22-ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்க பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இந்த பயணத்தின் போது அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு நாடுகளுக்கிடையேயான பரஸ்பரம் நட்புறவு குறித்து பேசுகிறார். இந்நிலையில், இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த, அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் அரசு முறை பயணமாக இன்று(ஜூன் 05) இந்தியா வந்தார்.
டில்லியில் அவருக்கு மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ராணுவ படையினர் அளித்த அணிவகுப்பு மரியாதையை அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் ஏற்றுக் கொண்டார். இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த விஷயங்கள் மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பில் கவனம் செலுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. யானை பொம்மை ஒன்றை, அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆஸ்டினுக்கு, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பரிசாக வழங்கினார்.
இந்த பயணம் குறித்து அமெரிக்கா தரப்பில் கூறுகையில், இரு நாடுகள் இடையிலான ராணுவ தொழில்நுட்பம் சாா்ந்த ஒத்துழைப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான துவக்கமாக இருக்கும். இந்தியாவும் அமெரிக்காவும் பாதுகாப்புத் துறையில் இணைந்து செயல்பட பல்வேறு வாய்ப்புகள் உள்ளன எனக் கூறியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட அறிக்கை:
டில்லியில் எனது நண்பர் ஆஸ்டினை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியா மற்றும் அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில், செயல்திட்ட விருப்பங்களில் ஒன்றிணைந்து செயல்படுவது மற்றும் இரு நாடுகளுக்கு இடையே மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளை மையப்படுத்தி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகளின் உறவு முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் வெளியிட்ட அறிக்கை: பாதுகாப்பு உறவை வலுப்படுத்துவதற்காக முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனைகளை மேற்கொள்ள இந்தியாவுக்கு திரும்ப வந்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.
உள்ளூர் மக்களை பாதுகாக்க வாக்கு அற்ற நேகா வெளிஊர் பாதுகாப்பு அமைச்சருக்கு ரெட் கம்பள வரேவற்பு கொடுப்பது கோமாளித்தனத்தின் உச்ச கட்டம்