நேற்று முன்தினம் மதியம், காப்பகத்தில் உள்ள, 12 வயது சிறுவன், மதில் சுவர் ஏறி தப்பிக்க முயற்சித்தார். காவலர்கள் அந்த சிறுவனை பிடித்து, காப்பக நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். சிறுவன் கூறிய தகவலால் அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு தகவல் தெரிவித்தனர்.
குழந்தைகள் பாதுகாப்பு உறுப்பினர்கள் நடத்திய விசாரணையில், சிறுவன் தங்க வைக்கப்பட்டிருந்த குடிலின், 40 வயது பெண் காப்பாளர், தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததால், மன உளைச்சலில் சிறுவன் தப்பிக்க முயற்சித்ததாக கூறினார். வெளிப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, பெண் ஊழியரை போக்சோ பிரிவில் கைது செய்தனர்.
பழநி டாக்டர் வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை
பழநி அரசு மருத்துவமனை டாக்டர் கோகுலகண்ணன் 37, கவுண்டர் இட்டேரி ரோட்டில் வசித்து வருகிறார். இவர் குடும்பத்துடன் நேற்று காலை திருச்செங்கோடு சென்றார். இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது தெரிந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 25 பவன் நகை, ரூ. 5 லட்சம், வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
நீதிமன்றத்தில் ரவுடியை வெட்டிய வழக்கில் மேலும் 2 பேர் கைது
ராமநாதபுரத்தில் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் இருக்கை முன்பு ரவுடி அசோக்குமார் நிபந்தனை ஜாமினில் கையெழுத்து போடும் போது அவரை ரவுடி கொக்கி குமார் வெட்டிவிட்டு தப்பி ஓடினார். ராமநாதபுரம் எஸ்.பி., தங்கதுரை, கேணிக்கரை இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் போலீஸ் தனிப்படை அமைத்து தொடர்புடையவர்களை தேடினர்.
ராமநாதபுரம் அருகே பிரப்பன்வலசை கடற்கரை பகுதியில் போலீசாரை தாக்கிவிட்டு ஓடிய கொக்கிகுமாரை நேற்று முன்தினம் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இதற்கு உடந்தையாக இருந்த கொக்கி குமாரின் தம்பி அஜித் 23, சண்முகநாதன் 22 , ஆகியோரை கேணிக்கரை போலீசார் கைது செய்தனர்.
மத்திய சிறையில் ஆசிரியை மானபங்கம்; புகார் பெறாமல் மூடி மறைத்ததால் அதிர்ச்சி
தமிழக சிறைகளில் தண்டனை கைதியாக உள்ளவர்கள் படிக்க, திருச்சி மத்திய சிறையில் ஐ.டி.ஐ., உள்ளது. இங்கு, கோவை மத்திய சிறையில், போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற திருமூர்த்தி, 25, என்பவர் உட்பட 35 தண்டனை கைதிகள், திருச்சி மத்திய சிறையில் தங்கி, தையல் வகுப்பு படிக்கின்றனர். அவர்களுக்கு, 45 வயது தையல் ஆசிரியை வகுப்பு நடத்தி வருகிறார். கடந்த, 1ம் தேதி காலை நடந்த வகுப்பிற்கு பின், பகல், 11:45 மணிக்கு கைதிகள் சாப்பிட சென்றனர்.
அப்போது, திருமூர்த்தி சாப்பாட்டை முடித்து முன்னதாகவே வகுப்பறைக்கு வந்தார். அங்கு தனியாக இருந்த ஆசிரியையின் வாயில் துணியை அடைத்து, மானபங்கம் செய்ய முயன்றார். அதிர்ச்சியடைந்த ஆசிரியை, திருமூர்த்தியிடம் இருந்து விடுபட்டு, தன்னை பாதுகாத்துக் கொள்ளும் வகையில், அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து, 'குத்தி விடுவேன்' என மிரட்டினார். உடனடியாக கைதி, ஆசிரியையை விட்டு ஓடி, குளியல் அறையில் ஒளிந்து கொண்டார்.
சிறைத்துறை அதிகாரிகளிடம், இது குறித்து புகார் கொடுக்கச் சென்ற ஆசிரியையிடம், திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், 'இதனால் உங்களுக்கு தான் கெட்ட பெயர், அசிங்கம். அப்படியே விட்டு விடுங்கள்' என, கூறி உள்ளார். அங்குள்ள பெண் அதிகாரியும், ஆசிரியைக்கு ஆறுதல் கூட கூறாமல், புகார் கொடுக்கக் கூடாது என்பது போல மிரட்டி உள்ளார். இதனால், மனமுடைந்த ஆசிரியை, அங்கிருந்து சென்றார்.
பல்வேறு குற்ற பின்னணி கொண்ட ஆண் கைதிகளுக்கு, வகுப்பெடுக்கச் செல்லும் பெண் ஆசிரியைக்கு, உரிய பாதுகாப்பு அளிக்காமல் சிறைத்துறை மெத்தனமாக இருந்துள்ளது. மேலும், தண்டனை கைதியின் குற்றச் செயலை மறைக்கும் விதமாக, சிறை அதிகாரிகள், பாலியல் கொடுமைக்கு ஆளான பெண் ஆசிரியையை புகார் கொடுக்க விடாமல் செய்தது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மாணவியை கர்ப்பமாக்கிய கூலி தொழிலாளிக்கு வலை
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்த, 51 வயதான தொழிலாளி, மனைவியை பிரிந்து வாழ்கிறார். இவரது சகோதரர் உறவு முறை கொண்டவரின், 15 வயது மகள், பாட்டி பராமரிப்பில் உள்ளார். ஒன்பதாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, பத்தாம் வகுப்பு செல்ல உள்ளார். மாணவியை கடந்த ஜனவரி முதல், பலமுறை மிரட்டியும், பயமுறுத்தியும் இவர் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால், மாணவி உடல் நலம் பாதிக்கப்பட்டார். சந்தேகமடைந்த பெற்றோர் மாணவியை, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று பரிசோதித்தனர். இதில், அவர் மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். விசாரித்த போது, நடந்த விபரத்தை மாணவி கூறினார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த புகாரின் படி, செய்யாறு அனைத்து மகளிர் போலீசார், போக்சோ வழக்குப் பதிந்து, தலைமறைவான தொழிலாளியை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து (5)
ஆசை வரும் போது உறவு முறை
அந்த சிறுவனுக்கு முதலில் கவுன்சிலிங் தேவை... அந்த நாற்பதை அரெஸ்ட் பண்ணுனீங்களே. அதை எங்கியாவது டீம்கா மீட்டிங்கில் உட்ருங்க .... அதுக்கப்புறம் அம்மணி கனவுல கூட ஏடாகூடமா தோணாது ....
காலம் கலி காலமாகமாறி போச்சுங்க
காலம் கலி காலமாகமாறி போச்சுங்க
திராவிட அரசு சிறை துறை அதிகாரிகளுக்கு இன்னும் சிலதை புரிய வைக்கவில்லை, அந்த அதிகாரியை மாற்றி கடும் பணியில் ஈடுபடுத்தனும்