Load Image
Advertisement

சென்னை - புவனேஸ்வருக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை: ரயில் விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பயணியரை, அவர்களது உறவினர்கள் சந்திக்கும் வகையில், சென்னை சென்ட்ரலில் இருந்து, ஒடிசா மாநிலம் புவனேஸ்வருக்கு, இன்று இரவு, 7:20 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

Latest Tamil News


ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்தால், பல்வேறு மாநிலங்களில் இருந்து, சாலிமார் வழியாக செல்லும், 50க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களின் சேவை நேற்றும் ரத்து செய்யப்பட்டது. மாற்று பாதையில், 60க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், ரயில் விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பயணியரை உறவினர்கள் சந்திக்கும் வகையில், சென்னை சென்ட்ரலில் இருந்து- புவனேஸ்வருக்கு இன்று இரவு, 7:20 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் பிற்பகல், 3:25 மணிக்கு புவனேஸ்வர் சென்றடையும்.

இந்த ரயிலில், காயமடைந்த பயணியரின் உறவினர்கள், சிறப்பு பாஸ் வாங்கி பயணிக்கலாம். இதுபோல, ஏற்கனவே, ரத்து செய்யப்பட்ட ரயிலுக்கு மாற்றாக, இந்த ரயிலில் முன்பதிவு செய்தும் பயணிக்கலாம் என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


வாசகர் கருத்து (1)

  • N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா

    அனைவரும் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement