Load Image
Advertisement

6 மாதங்களாக ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை முடக்கம்: பயணிகள் அவதி

ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் பாலம் பழுதால் ஆறு மாதங்களாக ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து முடங்கியதால் பயணிகள் சிரமப்படுகின்றனர்.

1914ல் பாம்பன் கடலில் அமைத்த ரயில் பாலம் நடுவில் உள்ள தூக்கு பாலத்தில் உள்ள தூண்கள், இரும்பு பிளேட்டுகள் பலவீனமாகி 2022 நவ., 23 முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து ரத்தானது.

Latest Tamil News


இந்நிலையில் ரூ. 525 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டுமான பணி நடந்து வரும் சூழலில் கடந்த 6 மாதமாக ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து இன்றி சென்னை, கோவை, திருப்பதி மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் வர வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் மதுரை, திருச்சியில் இருந்து வரும் பாசஞ்சர் ரயில்கள் ராமநாதபுரம், மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுகிறது.

இங்கிருந்து பயணிகள் அரசு பஸ், ஆட்டோ, வாகனங்களில் பெரும் சிரமத்துடன் ராமேஸ்வரம் வந்திறங்குகின்றனர். எனவே புதிய ரயில் பாலம் கட்டுமான பணியை முடித்து இந்தாண்டு இறுதிக்குள் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவக்க மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும், என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


வாசகர் கருத்து (5)

  • M Ramachandran - Chennai,இந்தியா

    அறிவிப்புகள் இல்லாமால் ரயில் நிர்வாகம் செய்த பிழை. தகுந்த ஏர்பாடுகள் செய்வதில் சுணக்கம். பழைய மாதிரி அவுட் ஏஜென்சி மாதிரி இணைப்பு பேருந்துகள் யேஆக்ற்பாடு செய்திருக்கலாம். மற்றதற்கெல்லாம் மார் தட்டி குழு ரயில் நிர்வாகம் இதில் சறுக்கியிருக்கிறது

  • அப்புசாமி -

    வர்ர காசெல்லாம் ஐ.ஆர்.சி.டி.சி கொக்ளையடிச்சது போக எதுக்குமே பத்த மாட்டேங்குது. நடந்து போங்க.

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    ரயிலை ஓட்டாமல் ஆயிரம் மக்கள் உயிரை காப்பாற்றிய பிரதமர் என்று பட்டம் கொடுங்களேன். பறந்து வந்து மெடல் குத்திக்குவார்.

  • ஆக .. - Chennai ,இந்தியா

    மண்டபத்திலிருந்து சென்று வருவதில் சற்று சிரமம் தான் ... அமர்நாத் கேதர்நாத் போயிட்டு வந்தா இதெல்லாம் பெருசா எடுத்துக்க மாட்டாங்க ..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement