Load Image
Advertisement

இலங்கைக்கு கஞ்சா கடத்தல் வழக்கில் ஆந்திர வாலிபர்கள் உட்பட 6 பேர் கைது

6 people, including Andhra youths, arrested in the case of smuggling ganja to Sri Lanka   இலங்கைக்கு கஞ்சா கடத்தல் வழக்கில் ஆந்திர வாலிபர்கள் உட்பட 6 பேர் கைது
ADVERTISEMENT
திருவாடானை : ஆந்திராவிலிருந்து கொண்டு வந்த கஞ்சாவை, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற வழக்கில் ஆந்திராவை சேர்ந்த இருவாலிபர்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்து, 21 கிலோ கஞ்சா, காரை பறிமுதல் செய்தனர்.

மதுரை பி.பி.குளத்தை சேர்ந்தவர் சேக்முகமது இப்ராகிம் 29. இவர் கஞ்சா கடத்துவதை தொழிலாக கொண்டுள்ளார். ஜூன் 3ல் தொண்டி கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ராமநாதபுரம் மதுவிலக்கு டி.எஸ்.பி. ராஜூ, திருவாடானை டி.எஸ்.பி. நிரேஷ் தலைமையிலான போலீசார், தொண்டி கடற்கரை பகுதியில் சுற்றி திரிந்த சேக்முகமது இப்ராகிமை கைது செய்தனர்.

அவரது கூட்டாளிகள் தொண்டி அருகே முள்ளிமுனை ராஜா 37, மணக்குடி கணேசன் 31, புதுப்பையூர் பாக்கியராஜ் 34 ,ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

தொடர் விசாரணையில் ஆந்திராவில் இருந்து கொண்டுவந்து, காரங்காடு கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்த வைத்திருந்த 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஆந்திராவிற்கு சென்ற தனிப்படை போலீசார் கிருஷ்ணா மாவட்டம் பெத்தவட்டுபள்ளியை சேர்ந்த ஸ்ரீஹரி 37, சேகுஸ் ,28 ஆகியோரை கைது செய்து, கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.


வாசகர் கருத்து (2)

  • Rajamani K - Chennai,இந்தியா

    கடத்தல் என்றாலே,.... அது கஞ்சாவோ, தங்கமோ ... மர்க்கத்தினர்தான் முதலிடம்.

  • ஆக .. - Chennai ,இந்தியா

    செக்குலர் திராவிட கும்பல் ..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement