ADVERTISEMENT
புதுடில்லி : ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து எதிரொலியாக, 123 ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 56 ரயில்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஹவுரா - சென்னை மெயில், கன்னியாகுமரி - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமார் விரைவு ரயில், திருப்பதி வாராந்திர சூப்பர்பாஸ்ட் விரைவு ரயில் உள்ளிட்ட 123 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இதேபோல் தாம்பரம் - டின்சுகியா விரைவு ரயில், புதுடில்லி - புரி விரைவு ரயில், புருஷோத்தம் விரைவு ரயில், திஹா - விசாகப்பட்டினம் சூப்பர் பாஸ்ட் விரைவு ரயில் உள்ளிட்ட 56 ரயில்களின் வழித்தடம் மாற்றப்பட்டு இயக்கப்பட்டன.
இதற்கிடையே, வழக்கமான ரயில் சேவை வரும் 7ம் தேதி முதல் அமலுக்கு வரும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!