மருத்துவக் கட்டமைப்பை குலைக்கிறது என்.எம்.சி.,: இந்திய மருத்துவ கழக தலைவர் குற்றச்சாட்டு
கோவை: ''இந்தியாவின் மருத்துவக் கட்டமைப்பை, தேசிய மருத்துவக் கவுன்சில் சீர்குலைக்கிறது,'' என, ஐ.எம்.ஏ., தலைவர் சரத்குமார் அகர்வால் குற்றம்சாட்டினார்.
கோவையில் நடந்த மருத்துவக் காப்பீடு தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்ற இவர், நிருபர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசு, இந்திய மருத்துவக் கல்வியை, தேசிய மருத்துவ கவுன்சில் எனும் என்.எம்.சி., வாயிலாக சீர் குலைத்து வருகிறது. தேசிய மருத்துவக் கவுன்சிலின் பணி, மருத்துவக் கல்லுாரிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது மட்டுமாகவே இருக்கிறது.
விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்தால் போதும். மருத்துவக் கல்லுாரிக்கு அனுமதி கிடைத்துவிடும். அதில் மாணவர்கள் சேர்ந்து படிப்பர்.
அதுவரை எந்த ஆய்வும் செய்யாத மருத்துவக் கவுன்சில், 5 ஆண்டுகளுக்குப் பின், விதிகளை பூர்த்தி செய்யவில்லை எனக்கூறி, அங்கீகரிக்க மறுத்துவிடுகிறது.
இதனால், 80 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்து படித்த மாணவனின் கதி என்னாகும்?
என்.எம்.சி., வந்த பின், மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணம் பல மடங்கு அதிகரித்து விட்டது. மேலும், இளநிலை மருத்துவப்படிப்பில், அலோபதி, நேச்சுரோபதி என பல்வேறு படிப்புகளை ஒருங்கிணைத்துள்ளது.
இது, மருத்துவப்படிப்பின் தரத்தை சீர்குலைக்கிறது. 'நெக்ஸ்ட்' போன்ற அனைவருக்கும் ஒரே தேர்வு முறை ஏற்புடையதல்ல. இப்படி, இந்திய மருத்துவக் கட்டமைப்பை எல்லாவகைகளிலும் தேசிய மருத்துவக் கவுன்சில் சீர்குலைக்கிறது.
சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வி தொடர்பான கொள்கை முடிவுகளை எடுக்கும்போது, இந்திய மருத்துவக் கழகமான ஐ.எம்.ஏ.,வை மத்திய அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஒரு உயிரை காப்பாற்றும் உன்னதமான பணியை உங்களைப் போன்ற மருத்துவர் ஒருவரால் மட்டுமே முடியும். மருத்துவராகிய நீங்கள் கடவுளுக்கு இணையாக மதித்து போற்றப்படுகின்றீர்கள். எம் பி பெ எஸ் அட்மிஷன் கிடைத்தவுடன் மருத்துவராகி மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என கூறும் உங்களைபோன்றோர்கள் படித்து முடித்து பணியை தொடங்கும்போது அதே மனப்பான்மையுடன்தான் உள்ளீர்களா? அந்த புனிதமான சேவை இன்று சேவை மனப்பான்மையில்தான் உள்ளதா? பெரும்பாலான மருத்துவர்களும் மருத்துவமனைகளும் இதை வியாபாரமாகத்தானே இன்று செய்துகொண்டுள்ளன. இந்தியாவில் மருத்துவர் மக்கள் விகிதாச்சாரம் மிகவும் குறைவாக உள்ளது உங்களுக்கு தெரியாதா? மருத்துவ படிப்பிற்கான சீட்களை அதிகரிக்காமல் இந்த விகிதத்தை எப்படி குறைப்பது? தனியார் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தகுதியின் அடிப்படையில்தான் நடத்தவேண்டும் வியாபாரமாக அல்ல என்றுதானே இந்த அரசு சட்டங்களை கொண்டுவந்துள்ளது. நீங்கள் சொல்லும் குறைகளில் அர்த்தம் வேண்டும்