ADVERTISEMENT
சென்னை : 'தமிழகம் முழுதும் ஒன்பது மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நேற்று மாலை நிலவரப்படி, மதுரை விமான நிலையத்தில், 41 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவானது. இது, 106 டிகிரி பாரன்ஹீட். தமிழகம், புதுச்சேரியில் நேற்று, 18 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை நிலவியது.

நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், பெருந்துறையில், 5 செ.மீ., மழை பெய்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யலாம்.
மன்னார் வளைகுடா, தெற்கு கடலோர பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில், மணிக்கு 65 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, 7ம் தேதி வரை மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மழை பெய்யுமாம்வெயில் மிரட்டுமாம்..எதை நம்ப