ADVERTISEMENT
சென்னை : அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்களுக்கு, இரண்டு மாதமாக சம்பளம் வழங்கப்படாததால், கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு மாதம், 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
ஏற்கனவே இவர்களுக்கு, ஒரு மாதம் தாமதமாக சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது மார்ச், ஏப்ரல் மாத சம்பளமும், பல மாவட்டங்களில் வழங்கப்படவில்லை.
பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், சம்பளத்தை விரைந்து வழங்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வாசகர் கருத்து (2)
டாஸ்மாக் வருமானம் நாற்பதாயிரம் கோடிகள், கள்ள சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய்கள், ஆனால் ஆசிரியர்களுக்கு சம்பளம் போட பணம் இல்லை. விளங்கிடும் டுமிழ்நாட்டின் எதிர்காலம்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
ஆசிரியர்களுக்கு சம்பளம் இரண்டு மாதமாக தராமல் இருப்பது வேதனை அளிக்கிறது. இந்த நிலை மாறி தடை இல்லாமல் மாதா மாதம் சம்பளம் வழங்கும் வரை மதிப்பிற்குரிய முதல் அமைச்சரும் மற்ற அமைச்சர்களும் எதிர் கட்சி உள்பட மற்ற எம் எல் ஏக்களும் சம்பளம் வாங்காமல் இருக்க வேண்டும். இவ்வாறு செய்வார்களே ஆனால் ஆசிரியர்களுக்கும் மற்ற தற்காலிக அரசு ஊழியர்களுக்கும் தடை இல்லாமல் மாதம் தோறும் சம்பளம் வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் செய்வார்களா?