ADVERTISEMENT
புவனேஸ்வர் : ஒடிசா ரயில் விபத்து காரணமாக, பாலசோர் வழித்தடத்தில் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் போக்குவரத்து சீராகும் வரை, ஒடிசாவில் இருந்து மேற்கு வங்கத்தின் கோல்கட்டா நகருக்கு இலவச பஸ் போக்குவரத்து இயக்க, ஒடிசா அரசு முடிவு செய்துள்ளது.
ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே மூன்று ரயில்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. தண்டவாள சீரமைப்பு பணிகளால் பாலசோர் வழித்தடத்தில் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து, ''ஒடிசா அரசு சார்பில் புரி, புவனேஸ்வர், கட்டாக் ஆகிய இடங்களிலிருந்து கோல்கட்டாவுக்கு கட்டணமில்லா பஸ்கள் இயக்கப்படும். பாலசோர் வழித்தடத்தில் ரயில் சேவை சீராகும் வரை இந்த இலவச பஸ்கள் இயக்கப்படும்,'' என, ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதாதளம் தலைவருமான நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ரயில் விபத்தில் உயிரிழந்த ஒடிசா பயணியர் குடும்பத்தினருக்கு தலா, 5 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா, 1 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
வாசகர் கருத்து (7)
ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதாதளம் தலைவருமான நவீன் பட்நாயக்.. இவரை சந்திக்க இங்கிருந்து இரெண்டு கத்துக்குட்டிகள் ஒரிசா சென்றது. அவர்களுக்கு பஞ்சு மிட்டாயும் அரிசி பொரியும் கொடுத்து திருப்பி அனுப்பினார்கள் ...தமிழ் தமிழன் தமிழன்டா ......
மிகவும் பாராட்டபட வேண்டியது. மிக நல்ல அறிவிப்பு.
மோதலில் தப்பித்தவர்களுக்கு உதவுவது மனித நேயம். ஆனால் அங்கு அலையும் ஆன்மாக்களை திருப்தி செய்பவர்களையும் வானுலகத்தினர் போற்றுவர்
மனிதன் விதி முடிவது இயற்கையின் கையில். இடையில் போனவர்கள் உயிர்கள் விதி முடியும் வரை உயிர் விட்ட இடத்திலேயே சுழன்று கொண்டிருக்கும். அடுத்த மோதல் வராமல் இருக்க அந்த இடத்தில் பரிகாரபூஜைகளை நடத்தலாம்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதுபோன்ற நேரங்களில் உதவிசெய்யும்போது, அந்த உதவிக்கு இலவசம் என்று 'ஸ்டிக்கர்' ஓட்டுவது சரியல்ல. அது ஏதோ சுட்டிக்காட்டுவதுபோல உள்ளது. பார்க்கப்போனால், மக்களின் வரிப்பணத்தில், சம்பந்தப்பட்ட அரசு இப்பொழுதுதான் மக்களுக்கு செய்யவேண்டிய சேவையை முறையாக செய்கிறது. மக்கள் இல்லையென்றால், அரசு இல்லை. மக்களின் வரிப்பணம் இல்லையென்றால் அரசு கஜானா காலி. ஆகையால், இதுபோன்ற நேரங்களில் உதவிசெய்துவிட்டு, அதற்கு 'இலவசம் என்கிற ஸ்டிக்கர்' ஒட்டிக்கொள்வதை மக்கள் கண்டிக்கிறோம்.