ADVERTISEMENT
சென்னை: சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி உட்பட, மாவட்ட நீதிபதிகள் 10 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை பதிவாளர், எம்.ஜோதிராமன் வெளியிட்ட அறிவிப்பு:
காத்திருப்போர் பட்டியலில் இருந்த சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி சாய்ப்ரியா, கடலுார் குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாகவும்; திண்டுக்கல் மாவட்ட கூடுதல் நீதிபதி பி.சரவணன், தேனி குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாகவும்; திருப்பூர் மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிபதி எஸ்.நாகராஜன், கிருஷ்ணகிரி மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.
மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி என்.நாகலட்சுமி, திருச்சி மாவட்ட குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாகவும்; நாமக்கல், இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி எம்.பாலகுமார், நாமக்கல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சேலம் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சி.ஜெயஸ்ரீ, சென்னை, ஏழாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற முதன்மை நீதிபதியாகவும்; சென்னை, ஏழாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற முதன்மை நீதிபதி எழில் வளவன், சென்னை சி.பி.ஐ., 13வது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.
சென்னை நான்காவது கூடுதல் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி ஏ.சரவணகுமார், தமிழ்நாடு விற்பனை வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய தலைவராகவும்; பெரம்பலுார் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி முத்துகுமார வேல், மதுரை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகவும்; சென்னை சி.பி.ஐ., 13வது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.கே.மெகபூப் அலிகான், திண்டுக்கல் மாவட்டத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!