சென்னை : ஆவின் நிறுவனம், பால் மட்டுமின்றி தயிர் உள்ளிட்ட பல வகை பால் பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது. கோடை வெப்பத்தை சமாளிக்க, ஆவின் தயிர் வகைகளை நுகர்வோர் அதிகம் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
இதில், 500, 200 மி.லி., பாக்கெட் தயிர்களுக்கு, உற்பத்தி செய்த நாளில் இருந்து, நான்கு நாட்கள் காலாவதி தேதி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அவை, ஆவின் கிடங்குகளில் இருந்து, பாலகங்களுக்கு வருவதற்கு ஒரு நாளாகிறது.
மூன்று நாட்களில் அவற்றை விற்க வேண்டும். ஆனால், இரண்டாம் நாளிலேயே தயிர் புளித்த வாடை வீசுகிறது.
தயிர் கெட்டியாக இல்லாமல், மோர் போல திரவமாகவும் இருக்கிறது. மூன்றாவது நாளில், தயிர் பாக்கெட் உப்பி வெடிப்பது போலாகி விடுகிறது. இதனால், ஆவின் தயிரை ஆர்வமுடன் வாங்குவோர் அதிருப்தி அடைகின்றனர்.
புளித்த வாடையுடன் விற்கப்படும் தயிர், நுகர்வோரிடம் இருந்து திரும்ப பெறப்படுவது இல்லை. எனவே, ஆவின் தயிரின் தரத்தை ஆய்வு செய்து, விற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (7)
விங்யான ஊழல் ஒன்று தான் எப்போதும் தங்கும் இந்த கேடுகெட்ட மாடல் ஆட்சியில் ...
நன்றாக நடக்கும் அரசு நிறுவனங்களை நிர்வாகக் கோளாறு செய்து தனியார் வியாபாரிகளை ஊக்குவித்து தனியார் மயமாக்கி பண்ணைகளின் மாநிலம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் உள்ள நிலங்களை அபகரிக்க முயற்சி நடக்கிறது.
புவனேஷ்வர் to சென்னை சென்னை to புவனேஷ்வர் விமானக் கட்டணம் ரூ.50 ஆயிரத்தை கடந்துள்ளது விமான நிறுவனங்கள் எழவு வீட்டில் கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறது அதை தடுக்க திராணியின்றி இருக்கிறது மத்திய அரசு..
“லல்லு வின் ரயில்வே பணிகள்” இன்றும் விவாதபொருளாக அவர்கள் பாடத்திட்டத்தில் உள்ளது. யார் ஒருவரை ஊழல்வாதியாக, கோமாளியாக ஊடகங்கள் சித்தரிக்கிறதோ, அவர் உண்மையில் மக்களுக்காக சிந்திக்கும், உழைக்கும் சமூகநீதி சிந்தனையாளராக இருப்பார் என்பதற்கு லல்லு பிரசாத் யாதவ் ஒரு எடுத்துக்காட்டு
அரசு நிறுவனமான ஆவின் தயிர் தரமில்லாமல் இருக்கிறது. ஆவின் வெண்ணெய் கிடைப்பதே இல்லை. செயற்கையாக முறையில் தட்டுப்பாடு உருவாக்கப்பட்டு, பதுக்கப்பட்டு, கள்ளமார்க்கெட்டில் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் வெளியில் பேசிக்கொள்கிறார்கள். இந்த லெட்சணத்தில் கூட்டுறவு நிறுவனமான அமுல் நிறுவனத்தை களங்கப்படுத்தும் விதமாக FAKE Video திட்டமிட்டு பரப்பப்படுகிறது.