ADVERTISEMENT
கோழிக்கோடு : கேரளாவில் கடலில் விழுந்த பந்தை எடுக்கச் சென்ற இரண்டு சிறுவர்களை அலை இழுத்துச் சென்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கோழிக்கோடு நகரைச் சேர்ந்த சில சிறுவர்கள் அங்குள்ள கடற்கரைக்கு நேற்று காலை விளையாடச் சென்றனர். அவர்கள் விளையாடிய பந்து, கடலுக்குள் சென்றது. அதை எடுப்பதற்காக மூன்று சிறுவர்கள் தண்ணீருக்குள் இறங்கினர்.
அப்போது வீசிய பெரிய அலை, மூன்று சிறுவர்களையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது.
அருகில் இருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு, ஒரு சிறுவனை மட்டும் உயிருடன் மீட்டனர். 15 மற்றும் 16 வயதுள்ள இரண்டு சிறுவர்களை அலை, கடலின் ஆழமான பகுதிக்கு இழுத்துச் சென்றது.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் மீனவர்கள், மாயமான இரண்டு சிறுவர்களையும் தேடி வருகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!