ADVERTISEMENT
புதுடில்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசியுள்ளார்.
பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் சேர உள்ளதாக தகவல் வெளியாகிஉள்ளது.
பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தெலுங்கு தேசம் கட்சி இடம்பெற்றிருந்தது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு, 2018ல் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகியது.
இந்நிலையில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று சந்தித்து பேசினார்.

.
அரை மணி நேரத்துக்கு மேலாக இந்த சந்திப்பு நடைபெற்றது.
தெலுங்கானா சட்டசபைக்கு இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடக்க உள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தெலுங்கு தேசம் இடம்பெறுவது குறித்தும், தெலுங்கானா சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களை இணைந்து சந்திப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
வாசகர் கருத்து (8)
ஆட்சியை பிடிக்கும் ஆசையில் பா.ஜ.க திரும்பவும் சந்திரபாபு நாயுடுவை கூட்டணியில் சேர்த்தால் லாபம் நாயுடுவுக்கு நஷ்டம் பா. ஜ.கவுக்கு
இப்போதாவது திரு திருந்தினேயே ரொம்ப நல்லது கட்சிக்காகவும் பதவிக்காகவும் பிஜேபியில் வரவேண்டாம் நாட்டுக்காகவும் நாட்டுமக்கள் நலத்திற்காக மட்டும் வரவும்
நாயுடு காரு கேட்ட செறப்பெல்லாம் ஆந்திராவுக்கு கெடச்சிட்டதால இனிமேல் அவரு நம்மாளு... திட்டப்பிடாது...🤫
People have not forgotten Chandrababu Naidu,s gimmics during last year loksabha election
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
OK in Telungana. Not sui for Andhra. Jagan Reddy is a good and dependable man and supporting BJP indirectly till date. BJP should not antagonize him for Chandrababu Naidu.