ADVERTISEMENT
சென்னை : 'ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்தை, இப்போது நினைத்தாலும் பயமாக இருக்கிறது. விபத்து நடந்த இடத்தில், குழந்தைகளின் அழுகுரல்களும், மரண ஓலங்களும் கேட்டன' என, சென்னை திரும்பிய பயணியர் உருக்கமாக தெரிவித்தனர்.
ஒடிசாவில் விபத்துக்கு உள்ளான விரைவு ரயிலில் பயணம் செய்த, தமிழக பயணியர், 137 பேர் சிறப்பு ரயில் வாயிலாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நேற்று அதிகாலை வந்தனர். சிலர் கைகளில் கட்டுடனும், சிலர் கால்களில் காயங்களுடனும் வந்தனர்.
அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்ற பின், அவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றனர். முன்னதாக, சோக நிகழ்வை பகிர்ந்து கொண்டனர்.
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், சென்னை காசிமேடை சேர்ந்த தரணி: டிரைவரான நான், வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக மேற்கு வங்கம் சென்றேன். கோரமண்டல் ரயிலில் முன்பதிவு செய்து, சென்னைக்கு வந்தேன்.
முன்பதிவு பெட்டிஎன்றாலும், கூட்டம் அதிகமாகவே இருந்தது. மாலை, 6:50 மணியளவில் திடீரென பலத்தசத்தம் கேட்டது.
ஒவ்வொரு பெட்டியும் துாக்கி வீசப்பட்டது. இதில், எனக்கு தலையில் பலத்த அடிபட்டது. கண் இமைக்கும் நேரத்தில், என்ன நடந்தது என்றே தெரியவில்லை.
குழந்தைகளின் அழுகுரல்களும், மரண ஓலங்களும், இன்னும் என் காதில் கேட்டுக் கொண்டிருக்கின்றன. உடல் அளவில் நான் தேறியிருந்தாலும், மனதளவில் என்னால் தேறி வர முடியவில்லை.
கனகராஜ், சேலம்: நான் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறேன். விரைவு ரயில், 120 கி.மீ., வேகத்தில் வந்து கொண்டிருந்தது. திடீரென பலத்த சத்தம் கேட்டது. ரயில் பெட்டிகள் திடீரென சாய்ந்தன. எங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை என நினைத்து, அருகில் இருந்த குழந்தைகளை முதலில் காப்பாற்றினோம். அப்படி, 70 பேரை காப்பாற்றினோம்.
உமாதேவி, கேரளா: ரயில் விபத்தை, இப்போது நினைத்தாலும் பயமாக இருக்கிறது. அதிக சத்தம் கேட்டதும், நாங்கள் துாக்கி வீசப்பட்டோம். எங்களுக்கு முன் இருந்த மூன்று பெட்டிகளும் தடம் புரண்டன.
விக்னேஷ்: நான் பயணம் செய்த, 'பி 2' பெட்டி, விபத்தில் சிக்கவில்லை. ஆனால், எங்களுக்கு முன் இருந்த பெட்டிகள் சேதமடைந்திருந்தன. என் கண் முன், 10 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர், கை, கால் முறிந்து, இடிபாடுகளில் சிக்கிஅவதிப்பட்டனர்.
இரவு நேரமாக இருந்ததாலும், மீட்பு பணிகள் வேகமாக நடந்ததாலும், எங்களுக்கு உதவி கிடைத்தது. ரயில் இன்ஜின் முன் இருந்த பெட்டியில், பயணியர் ஏராளமானோர் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து (3)
இந்த சம்பவத்தில் ஒரே ஆறுதலான விஷயம் இந்த விபத்துக்கு பிறகு அருகிலிருந்த கிராம மக்கள் செய்த உதவி. நான்கு ஐந்து கிராம மக்கள் இரவு முழுக்க விழித்திருந்து பிரதி பலன் இல்லாமல் உதவியுள்ளார்கள்.. பல பெற்றோரை இழந்த குழந்தைகளை சொந்த வீட்டில் பத்திரமாக பாதுகாத்து ஒப்படைத்துள்ளார்கள் .... இவர்களைத்தான் இங்குள்ள மத மாற்றிகள் பீட வாயன் பனி பூரி என்று கேவலமாக பேசுவது.. ஒரிசா மக்கள் தொகையில் 25 சதம் மலை வாழ் ஜாதியினர்...இந்தியா ஜனாதிபதி முர்மு ஒரிசா மாநிலத்தவர்... தமிழ் நாட்டிலும் பின் தங்கிய மாவட்டங்கள் பல உண்டு... ஆனால் மத வெறி கொண்டு அலையும் திராவிட மத மாற்றிகளுக்கு வெள்ளைக்காரன் கொடுக்கும் ஓசி சோறுதான் முக்கியம்...
மகா சோகமான நிகழ்வு.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
ஆனால் இறப்போ கூட்டாக வருகிறது. இது எதனால்