சென்னை: ரயில்கள் தடம்புரள்வது போன்ற விபத்துக்களை தவிர்க்க, நாடு முழுதும் புதுப்பிக்கப்படாத, 10,000 கி.மீ., துார பாதைகளை புதுப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
முக்கிய காரணம்
அதேநேரத்தில், பழைய ரயில் பாதைகளை புதுப்பிப்பதில் தீவிரம் காட்டாததால், ரயில்கள் தடம் புரள்வதும், அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் நிகழ்ந்து வருகிறது. இது, ரயில் பயணியர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, ஒடிசா மாநிலத்தில், இம்மாதம், 2ம் தேதி நடந்த கோர விபத்தில், 280க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
இந்த பெரிய ரயில் விபத்திற்கு, ரயில் தடம் புரண்டதே முக்கிய காரணம்.
இதுகுறித்து, டி.ஆர்.டி.யு., தொழிற்சங்க நிர்வாகி இளங்கோவன் கூறியதாவது:
ரயில் போக்குவரத்தில், ரயில்பாதை பராமரிப்பு முக்கியமான பணி. ஆண்டுதோறும் குறைந்தபட்சமாக, 4,000 கி.மீ.,ருக்கு ரயில் தண்டவாளங்களை புதுப்பிக்க வேண்டும். ஆனால், 3,000 முதல், 3,500 கி.மீ., துாரம் மட்டுமே புதுப்பிக்கப்படுகின்றன.
தற்போதைய நிலவரப்படி, 10,000 கி.மீ., துார பழைய ரயில் பாதைகள் புதுப்பிக்கப்படாமல் உள்ளன. இதுவே, ரயில்கள் தடம் புரள முக்கிய காரணமாக இருப்பதால், பழைய பாதைகளை உடனடியாக புதுப்பிக்க வேண்டும். இதற்கு, ரயில்வேக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிகரிப்பு
இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
ரயில் பாதைகள் புதுப்பிப்பு பணியை உடனடியாக முடிப்பதில், பல்வேறு நடைமுறை சிக்கல் உள்ளன. இருப்பினும், முன்பிருந்ததை விட அதிகமாக, சில ஆண்டுகளாக ரயில் பாதைகள் அதிகம் புதுப்பிக்கப்படுகின்றன.
இதன் அடிப்படையில் தான், ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இந்தாண்டு பட்ஜெட்டில், தெற்கு ரயில்வேக்கு மட்டும், 1,300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, ரயில் பாதைகள் புதுப்பிப்பு, சிக்னல் தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. எனவே, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள், பெரும்பாலான ரயில் பாதைகள் புதுப்பிக்கப்பட்டு விடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து (8)
நான் பலமுறை இந்த தளத்தில் எழுதியிருக்கிறேன்... இந்தியாவின் ரயில் போக்குவரத்து தற்போது bulk transporக்குt உதவும் வகையில் டிசைன் செய்யப்பட்டுவிட்டது. அதன் படி கிட்டத்தட்ட நாடு முழுவதும் வந்துவிட்ட பிராட் கேஜ் லைன்களில் தொடர்ந்து நூறு கிமீ வேகத்தில் இயக்குவது கூட ரிஸ்க் தான். இதை ஒழுங்கா பராமரிச்சு பாதை வளைவுகளை குறைத்து பாதுகாப்பானதாக ஆக்கினாலே 90கிமீ மணிக்கு ஆவரேஜாக கவர் செய்யலாம். மேலும் இந்த கொரமாண்டல் மாதிரி ரயில் கிட்டத்தட்ட 25 க்கும் மேற்ப்பட்ட பெட்டிகளுடன் முன்னால் இன்ஜின் பொறுத்தப்பட்டு இழுவிசையுடன் 120-130 கிமீ வேகத்தில் செல்வது மலைப்பாதையில் இறங்கி ஓடிவருவது மாதிரி... எந்த நேரத்திலும் பல்டியடிக்க வாய்ப்புகள் அதிகம்...😩 ஆகவே அதிவேக ரயில் பாதைகள் நவீன தொழில்நுட்பத்தில் அமைத்து தனியாக ஓட்டிக்கொள்ளட்டும்... இருக்கும் ப்ராட்கேஜில் கல்யானப்பெண்ணிற்கு மேக்கப் அடிச்ச மாதிரி வெறும் பெயிண்ட் அடிச்சிட்டு (வந்தே பாரத் தேஜஸ் அதிவேக சூப்பர் ஃபாக்ஸ் 🤭 etc..) பொட்டை வெயிலில் போகச்சொன்னால் ஆபத்து தான்...
நமக்கு வேறு வேலைகள் உள்ளது .ஆங்கிலேயர் போட்ட பல ரயில் பாதைகள் தான் இன்றும் உபயோகத்தில் உள்ளது இவற்றை இன்னும் பல மடங்கு மேம்படுத்த வேண்டும்
அதுக்கெல்லாம் நிதியில்லை. நேரமில்லை.
பெரும் செலவில் இரயில்வே கட்டமைப்யையே முழுவதுமாக மேம்படுத்த வேண்டும். இல்லை என்றால் குண்டு சட்டிக்குள்ளேயே குதிரைதான் ஓட்டிக்கொண்டு இருக்க வேண்டும். நாச வேலைகளை கண்காணிக்க தானியங்கி கட்டமைப்புக்கள் வேண்டும்.
தனியார் மயம் தான் தீர்வு. BSNL, AIR INDIA வை எவ்வளவு கேவலமாக வைத்திருந்தார்கள் காங்கிரஸ். தற்போது மோடி வந்த பிறகு தான் புதிதாக ரயில் மற்றும் பல புதிய தடங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பம் ஆகியவை வந்திருக்கிறது.