பாலியல் புகாரில் சிக்கிய பா.ஜ.,எம்.பி., பிரிஜ்பூஷன் சொந்த தொகுதி பேரணியில் பங்கேற்பு

இந்திய கூட்டமைப்பின் தலைவரும் உ.பி.,மாநிலத்தின் கைசர்கஞ்ச் தொகுதி பா.ஜ.,எம்.பி.,யுமானவர் பிரிஜ்பூஷன். இவர் மீது பெண் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றம் சாட்டி வருவதுடன் எம்.பி.,யை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே மத்தியில் ஆளும் பா.ஜ.,வின் ஒன்பது ஆண்டு கால சாதனையை விளக்கும் வகையில் மஹாசம்பர்க் அபியான் என்ற பெயரில் தனது சொந்த தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். வரும் 11-ம் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டமும் அதனை முன்னிட்டு நடைபெறும் பேரணியிலும் கலந்து கொள்ள உள்ளதாக பிரிஜ்பூஷன் கூறி உள்ளார்.

முன்னதாக நாளை (5 ம் தேதி) அயோத்தியில் ஜன் சேத்னா என்ற மஹா பேரணியில் கலந்து கொள்ள இருந்தார். மல்யுத்த வீராங்கனைகளின் புகார் எதிரொலி காரணமாக போலீஸ் விசாரணையை காரணம் காட்டி பேரணியை ஒத்திவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (13)
குறிப்பிட்ட பயிற்சி பள்ளியில் பயின்ற இந்த போராட்ட நபர்களின் செயல் சந்தேகத்திற்குரியதே.. ஒரு அரசு அமைப்பில் பாலியல் புகார் எனில் குழு அமைத்து விசாரணை செய்து அந்த அறிகையின் பேரில் தக்க நடவடிக்கை எடுப்பதே சிறப்பு.. இவர்கள் கூறும் புகாரில் உண்மை தன்மை இல்லை என்று மேரிகோம் தலைமையிலான குழுவின் அறிக்கை தெரிந்தே வீண் அரசியல் போராட்டம். இவர்கள் பதக்கங்களை ஏன் இன்னும் ஆற்றில் வீச வில்லை.. சும்மா நாடகம். எப்படி இந்த போராட்டதில் நரேஷ் தியாகத் வந்தார். இவர் நடத்திய விவசாய போராட்டமே ஒரு அந்நிய டிரஸ்ட் பண உதவி மூலம் நடந்துள்ளது... இவரின் ஈடுபாடு சந்தேகதிற்குரியாதே...
தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவது என்பது குற்றங்கள் செய்யவும் அதற்கான தண்டனைகள் அடையாமல் தப்பித்துக்கொள்ளவும் அல்ல என்பதை அரசியல்வாதிகள் ஆணவம் காரணமாக உணருவது இல்லை.
its an incredible India what to say !!!!!
டூல்கிட் வைத்து பியூஷ் பூஷனை கீழிறக்க ஆமாம் ஆத்மி மற்றும் ஸ்கேம்கிரன் போன்ற பல கோஷ்டிகள் முயல்கின்றன. விவசாயப் போராட்டம் போன்ற டூல்கிட்டில் பஞ்சாப் அதிகம் பங்கெடுக்கிறது. பணப்பரிவர்த்தனைகளை ஆராய்ந்தால் இதை கண்டிப்பாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
மல்யுத்த வீரர்கள் முதலில் கூறியது:ஒரு பெண் பிசியோ பலாத்காரம் செய்யப்பட்டார் என்று - பிசியோ அதை மறுத்தார்2015 இல் துருக்கி விஜயத்தின் போது அவர்கள் துன்புறுத்தப்பட்டனர் - பிரிஜ்பூஷன் துருக்கிக்கு செல்லவில்லை2016 ஆம் ஆண்டு மங்கோலியாவில் அவர்கள் துன்புறுத்தப்பட்டனர் - குழு (மேரி கோம் தலைமையிலான) மங்கோலியாவிற்கும் பிரிஜ் பூஷன் செல்லவில்லை என்பதைக் கண்டறிந்தது.1000 பெண்கள் துன்புறுத்தப்பட்டனர் - ஆனால் ஒரு பெயரையும் வழங்க முடியவில்லை.விவசாயிகள் போராட்டத்தை முன்னின்று நடத்திய ராகேஷ் டிகாயிட் மல்யுத்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்து/நிர்வகித்து வருகிறார், அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்.மல்யுத்த வீரர்கள் கங்கையில் பதக்கம் வீசுவதாக அறிவித்தபோது, அவர்களைத் தடுக்கவில்லை.அவர்களை ஹரித்வாருக்குப் போக வைத்தது, ஊடகங்கள் முன் நாடகம் நடத்தி பின்னர் திடீரென்று நரேஷ் டிகாயிட் தோன்றினார், இப்போது அவர்களை தடுத்து நிறுத்தினர்.அவர்களிடம் பதக்கங்களை பெற்று கொண்டு ஐந்து நாட்கள் அரசாங்கத்திற்கு கெடு அறிவித்துள்ளார். அடுத்த டிராமாவுக்கு தயாராகிறது டூல்கிட்டுகள்