Load Image
Advertisement

ரயில் விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கின்றனர் அதானி, ஷேவாக்

புதுடில்லி: ரயில் விபத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்க உள்ளதாக தொழில் அதிபர் அதானி மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீர் வீரேந்திர ஷேவாக் சமூக வலை தளத்தில் பதிவிட்டு உள்ளனர்.
Latest Tamil News


இது குறித்து அவர் சமூக வலை தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது: ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தால் கவலை கொண்டுள்ளோம். இந்த விபத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளின் பள்ளிக்கல்வியை அதானி குழுமம் கவனித்துக்கொள்வது என்று முடிவு செய்துள்ளோம். அவர்களுக்கு உறுதுணையாக இருப்பது நம் அனைவரின் கூட்டுப்பொறுப்பு ஆகும்.
Latest Tamil News

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் குழந்தைகளுக்கு சிறந்தநாளை கொடுங்கள் என பதிவிட்டு உள்ளார்.

இதே போல் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக், ஒடிசா ரயில் விபத்தில் பலியான பெற்றோர்களின் குழந்தைகள் கல்வியை கவனித்துக்கொள்வதுதான் என்னால் செய்யக்கூடியது. அவர்களுக்கு ேஷவாக் இன்டர்னேஷனல் பள்ளியில் உறைவிட வசதியுடன் இலவச கல்வியை வழங்க உள்ளேன் என சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.


வாசகர் கருத்து (24)

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    தீம்கா விபத்தில் தமிழர்களுக்கு சேதமே இல்லை என்று சொல்லி விட்டது. அப்படியென்றால் தெலுங்கர்களுக்கு சேதம் உண்டு என்பது போல தெரிகிறது. விபத்திலும் கூட பிரிவினைவாதத்தை விதைக்கும் தீம்காவுக்கு அடிப்படை பகுத்தறிவுப்பாடம் யாராவது புகட்ட வேண்டியது அவசியமாகிறது...

  • Ram RV -

    ஷேவாக் இல்லை. ஸேவாக். ஸேவுக்கும் வாவுக்கும் இடையே ஹ் சன்னமாக ஒலித்தால் அழகாக இருக்கும்.

  • sridhar - Chennai,இந்தியா

    இங்கேயும் இருக்கே கேடி சகோதரர்கள் மற்றும் ஊளை இடும் சினிமா நட்சத்திரங்கள் .

  • yts -

    என்ன பண்றது பரலோகம் மற்றவர்கள் அது கூட செய்யலையே வாழ்த்தாவிட்டாலும் பரவாயில்லை குற்றம் சொல்ல வந்துவிட்டாய்

  • RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

    எங்க ஊரு பதர்கள் மாதிரி சாதி மதம் பார்த்து உதவ மாட்டீங்களா கார்ப்பரேட்ஸ்????

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்