ஒடிசா ரயில் விபத்து : சி.பி.ஐ., விசாரணைக்கு பரிந்துரை

ஒடிசா மாநிலம், பாலசோர் இடத்தில் கோரமண்டல், ஹவுரா எக்ஸ்பிரஸ்,சரக்கு ரயில்
என அடுத்தடுத்து மோதிய விபத்தில், 275 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து, ரயில்வே உயர்மட்ட குழு விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில், மத்திய ரயில்வே அமைச்சர், அஸ்வினி வைஷ்ணவ், இரண்டாவது நாளாக ஆய்வு செய்தார்.

அவர், செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது:
மீட்பு பணிகள் முடிந்துள்ள நிலையில், தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.இச்சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரிக்கவும், ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (17)
பயணியர் விரைவு வண்டி loop line (தவறாக) செல்லும் முன் வேகம் குறைக்க வேண்டும். அதில் பிற வண்டி உள்ளதா என்று அறிந்து தன் வேகத்தை மேலும் குறைத்து விடும். ஆனால் அதே வேகத்தில் மோத காரணம் டிரைவர் or தீவிரவாதி? இரட்டை கோபுரம் சதி செயல் போல் உள்ளது. சிக்னல், inter lock பிரச்சனை இல்லை?
The Railway Minister should resign immediately....
அவர்களும் உங்கள் ஆட்கள் தானே, அதனால் தவறு உங்கள் மீது இருந்தாலும் உங்களுக்கு பயமில்லை!
திருடனே போலீசில் போய் புகார் கொடுக்கும் கதை. 200 கிமீ தூரத்துக்கு புல்லட் ட்ரெய்னுக்கு 1,50,000 கோடி பட்ஜெட். மொத்த நாட்டின் ரயில்வே பாதுகாப்புக்கு வெறும் 6,000 கோடி மட்டும். எது அவசியத் தேவை, எது டம்பத்திற்காக வீண்டிக்கும் திட்டம் என்பது சொல்லிக் காட்டியும் திருத்திக் கொள்ளாத ஜன்மங்கள். குற்றவாளி தப்பிக்க முடியாது என்று திருடனே சொல்கிறான். மனசாட்சின்னு ஒண்ணு இல்லாத கொடூரர்கள்.
எலக்ஷன் வருது. இதுமாதிரி சி.பி.ஐ விசாரணை நடத்தி, மின்ணணுக்களை ஏவியவர்கள்னு நாலு பேரை தீவிரவாதிகள்னு புடிச்சு போட்டா, புல்வாமா மாதிரி காமிச்சுரலாம்.