ADVERTISEMENT
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவம் தன்னை சிறை அடைக்கும் நோக்கத்துடன் தனது கட்சியை அழிக்கும் வகையில் செயல்படுகிறது என பாகிஸ்தான் மாஜி பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் விலகிய பின், அவர் மீது ஊழல், மோசடி, கொலை மிரட்டல் உட்பட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில், அல்காதிர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அல்காதிர் அறக்கட்டளை வழக்கில், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இம்ரான் கானுக்கு 2 வாரங்கள் ஜாமின் வழங்கியது. ஜாமீன் காலம் முடிவடைந்த நிலையில், மே 23ம் தேதி இம்ரான் கானுக்கு எதிரான 8 வழக்குகளிலும் வரும் ஜூன் 8 வரை ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இம்ரான் கூறியதாவது: பாகிஸ்தான் ராணுவம் தன்னை சிறை அடைக்கும் நோக்கத்துடன் தனது கட்சியை அழிக்கும் வகையில் செயல்படுகிறது. ராணுவம் மற்றும் ஐ.எஸ் அமைப்புகள் தனக்கும் தனது கட்சிகளுக்கு எதிராக பொய் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. தன் மீது எண்ணற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறையில் தள்ளுவதை அவர்களது நோக்கம். இத்தாண்டு நவம்பரில் நடைபெற உள்ள தேர்தலில், வெற்றி பெற்று மீண்டும் நான் பதவிக்கு வருவதை ராணுவத்தினர் விரும்பவில்லை.
நீதிமன்றங்கள் சரியான முறையில் செயல்பட்டு, நீதி வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ராணுவ நீதிமன்றங்கள் இதற்கு முன்னர் உரிய நடைமுறை, வெளிப்படைத்தன்மை இல்லாமை, நிர்ப்பந்திக்கப்பட்ட வாக்குமூலங்கள் ஆகியவற்றால் வழங்கப்பட்ட மரணதண்டனைகளை உள்ளிட்டவற்றை புறக்கணித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இம்ரான் கான் அண்மையில் கைது செய்யப்பட்ட போது, அவரை விடுதலை செய்யக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வாசகர் கருத்து (7)
பாவம் இம்ரான். காங்கிரஸ் மட்டும் இன்று இந்தியாவில் மத்திய ஆட்சியில் இருந்திருந்தால், இந்த நிலைமை ஏட்பட்டிருக்காது.
அந்த நாட்ட ஆண்ட ஒருத்தனாவது அந்த நாட்டு மக்களுக்கு முன்னேறுவதற்கு ஒரு வழி பண்ணியிருக்காங்களா திருடுவது மட்டும் தான் ஒரே ?? குழி பறிக்கிறது
பாகிஸ்தானில்ஆண்டவர்கள் மீதுஅடுக்கடுக்கான புகார்களும் நடவடிக்கைகளும் வாடிக்கைதானே..?இம்ரான்கான் விதி விலக்க..
பாக். ஒரு தேவையற்ற ஆணி.... நாடு விடுதலை அடையும் போது நிகழ்ந்த வரலாற்று பிழை....
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இவன் வேற, நீ சிறைக்கு போனா என்ன எந்த பிரச்சினையும் இல்லை 😏