ADVERTISEMENT
புவனேஸ்வர்: ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தால், பாலசோர் மாவட்டத்தில் உள்ள பிணவறைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், புவனேஸ்வர், புரி உள்ளிட்ட இடங்களில் உள்ள பிணவறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
பாலசோரில் உள்ள பிணவறையில் இடப்பற்றாக்குறை காரணமாக 187 உடல்கள் புவனேஸ்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இங்கும் அனைத்து உடல்களையும் வைக்க இடமில்லாததால் அதிகாரிகள் திணறி வருகின்றனர். புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 110 உடல்களை வைக்க மட்டுமே இடம் உள்ளது. இதனால், மற்ற உடல்கள் தனியார் மருத்துவமனைகளில் வைக்கப்பட்டு உள்ளன.
உடல்களை பாதுகாக்க தேவையான பெட்டிகள், ஐஸ் மற்றும் பார்மலின் ரசாயனம் ஆகியவற்றை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தான் வழங்கி உள்ளது. உடல்கள் அடையாளம் காணப்படும் வரை இவற்றை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
உடல்களை பாதுகாப்பதில் உள்ள பிரச்னைகள் குறித்து மாநில அதிகாரிகள் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கடுமையான வெப்ப காலத்தில் உடல்களை பாதுகாத்து வைப்பதில் சிக்கல் உள்ளதாக தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து, பிரதமர் மோடியும் விபத்து நடந்த இடத்தில் இருந்தபடியே, உடனடியாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவை தொடர்பு கொண்டு, புவனேஸ்வர் மருத்துவமனையில் உடல்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்படி உத்தரவிட்டார். உடனடியாக புவனேஸ்வர் வந்த மன்சுக் மாண்ட்வியா, அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டார்.
ஒடிசா அதிகாரிகள் கூறுகையில், ஒடிசாவில் இருந்து 86 ஆம்புலன்ஸ்களில் உடல்கள் நேற்று கொண்டு வரப்பட்டன. 17 உடல்கள் இன்று கொண்டு வரப்பட்டன. பிணவறை பற்றாக்குறையால் உடல்கள் குளிர்சாதன கிடங்கில் வைக்கப்பட்டு உள்ளது.
உயிரிழந்தவர்கள் பல மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் உள்ளது. இதனால், பயணிகளின் விவரம் மற்றும் இறந்தவர்களின் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளோம் என்றனர்.
உடல்களை அடையாளம் காணும் பணியில், மக்களுக்கு உதவிடும் வகையில் புவனேஸ்வர் மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஒன்று திறக்கப்பட்டு உள்ளது.

It is very Pathetic....