Load Image
Advertisement

‛மனம் உடைந்தது: ரயில் விபத்துக்கு ஜோ பைடன் இரங்கல்

Joe Biden 'heartbroken' by Odisha train crash, sends prayers to those who lost loved ones ‛மனம் உடைந்தது: ரயில் விபத்துக்கு ஜோ பைடன் இரங்கல்
ADVERTISEMENT
வாஷிங்டன்: இந்தியாவில் நடந்த ரயில் விபத்தைக் கண்டு மனம் உடைந்தது என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து தொடர்பாக ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் நடந்த மோசமான ரயில் விபத்தைக் கண்டு என் மனம் உடைந்தது. இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கும் என் பிரார்த்தனைகள் உடன் இருக்கும்.

குடும்பம்- கலாசார ரீதியாக இந்தியா - அமெரிக்கா ஆழமான உறவைக் கொண்டு உள்ளன. இவைதான் நம் இரு நாடுகளையும் ஒன்றிணைக்கின்றன. அமெரிக்கா முழுவதும் உள்ள மக்கள், இந்திய மக்களுடன் சேர்ந்து துக்கம் அனுசரிக்கிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


வாசகர் கருத்து (2)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    ஆம், மனம் உடைந்து குலைந்தது. இதுபோன்ற ஒரு கோரமான ரயில் விபத்தை நான் இதுவரை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. இனி இதுபோல் விபத்துக்கள் நடக்காவண்ணம் மிகவும் பொறுப்புடன் கண்காணிக்க வேண்டியது மத்திய அரசின் மற்றும் ரயில்வே நிர்வாகத்தின் கடமை.

  • Barakat Ali - Medan,இந்தோனேசியா

    குடும்பம்- கலாசார ரீதியாக இந்தியா - அமெரிக்கா ஆழமான உறவைக் கொண்டு உள்ளன. ...அப்படிச்சொல்லி எங்களை கேவலப்படுத்தாதீங்க .... உங்க டேஸ்ட்டே வேற ....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்