Load Image
Advertisement

கனவுகளை சிதைத்த ரயில் விபத்து...சிதறிய காதல் கடிதங்கள்: சமூக வலைதளத்தில் இன்று..!

A train crash that shattered dreams...shattered love letters: Today on social media   கனவுகளை சிதைத்த ரயில் விபத்து...சிதறிய காதல் கடிதங்கள்: சமூக வலைதளத்தில் இன்று..!
ADVERTISEMENT
ஒடிசா மாநிலம் பாலசோர் இடத்தில் கோரமண்டல் , ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் அடுத்தடுத்து சரக்கு ரயில் மீது மோதிய விபத்தில் 288-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 58பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளனர். 900-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டையே உலுக்கிய இந்த விபத்து தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. ரயில்வே அமைச்சர் விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்தி தவறு இழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். விபத்து நடந்த இடம் மற்றும் சிகிச்சை பெறுவோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பிரதமர் மோடி, தவறு இழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

விபத்து நடந்து மூன்றாவது நாளான இன்று பாதுகாப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் துரிதமாக மீட்புப் பணிகளை செய்து வருகின்றனர். இப்படி மீட்புப் பணி செய்யும் வீரர்களின் கண்ணில் ஆறாத சுவடுகளாக ஒவ்வொரு பொருளும் தென்படுகிறது. அது அவர்களின் கண்களில் ஏக்கத்தையும், வலியையும் ஏற்படுத்துகிறது.
Latest Tamil News
அந்த வகையில் சிதைந்த தண்டவாளத்தின் அடியில் பயணியின் கைப்பை ஒன்று கிடந்தது. அதை மீட்புக் குழுவினர் திறந்து பார்த்த போது, கண்களில் வேதனை கலந்த கண்ணீர் கசிந்தது. ஏனென்றால் அந்த நோட்புத்தகத்தில் இடம்பெற்ற அனைத்தும் காதல் கவிதைகள்.
Latest Tamil News
பல வண்ணங்களில் அந்த பயணி தனது காதலிக்கு வங்காள மொழியில் கவிதைகளாக எழுதியிருந்தார். வரிகள் ஒவ்வொன்றிலும், அவரின் காதலும், ஏக்கமும் கண்முன்னே வந்து நின்றது. அதில், சிறிய மேகங்கள் மழையை உருவாக்குகின்றன, சிறிய கதைகள் அன்பை உருவாக்குகின்ற எனத் தொடர்ந்தது. அதைப் பார்த்த மீட்புக் குழுவினர் எழுதியவர் யார், என்ன ஆனார் என்று தெரியாமல் அவரின் காதல் கவிதையுடன் திகைத்து நின்றனர்.
Latest Tamil News
இதைத்தொடர்ந்து சற்று நேரத்தில் குழந்தைக்குத் தந்தை வாங்கி சென்ற பொம்மைகள் சிதறிக் கிடந்தன. அதன் அருகில் மீட்பு குழுவினர் சென்று பார்த்த போது, அதில், ரத்த கறை படிந்திருந்தது. ஆசை, ஆசையாய் தனது மகளுக்கோ, மகனுக்கோ பொம்மைகளை வாங்கி சென்ற தந்தை என்ன ஆனார் என்று தெரியவில்லை. இந்த பொருட்களைத் தன்னார்வலர்கள் ஆங்காங்கே சேகரித்துக் குவித்து வைத்துள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.


வாசகர் கருத்து (11)

  • R S BALA - CHENNAI,இந்தியா

    எவ்வளவு யோசித்தாலும் இந்த விபத்து அறவே தவிர்க்கப்பட்டிருக்கவேண்டும்.. இன்னுமும் நிம்மதியாக தூங்க முடியவில்லை , மனபதட்டம் ஓயவில்லை இதயம் வலிக்கிறது.. 😭

  • Balram - chennai,இந்தியா

    இது போன்ற உண்மையான காதலை பார்த்து வெகு காலங்கள் ஆகிவிட்டது இந்த மொபைல் யுகத்தில் மிகவும் அரிதாகிவிட்டது. இவர்களின் ஆத்மார்த்தமான இந்த காதலுக்கு அழிவில்லை.

  • Sureshkumar - Coimbatore,இந்தியா

    ஆசை நிறைவேறாமல் உயிரிலந்த அணைத்து ஆன்மாக்களும் ஆத்ம சாந்தி பெறட்டும், இது போன்ற விபத்து எங்கும் நிகழக்கூடாது இறைவா.

  • பெரிய ராசு - Arakansaus,இந்தியா

    அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்... இறைவா அனைவரயும் காப்பாற்றுங்கள்

  • sahayadhas - chennai,பஹ்ரைன்

    இரங்கல் செய்தி

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement