இது தொடர்பாக ரயில்வே வாரிய உறுப்பினர் ஜெயா வர்மா சின்ஹா கூறியதாவது: ரயில் விபத்திற்கு சிக்னலில் பிரச்னை இருந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு அதிகாரியின் விரிவான விசாரணைக்கு காத்திருக்கிறோம். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மட்டுமே விபத்துக்குள்ளானது. மணிக்கு 128 கி.மீ., வேகத்தில் பயணித்த இந்த ரயிலுக்கு தான் அதிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
சரக்கு ரயில் தடம் புரளவில்லை. இதில் இரும்பு தாதுக்கள் ஏற்றி வந்ததால் தான், கோரமண்டல் எக்ஸ்பிரசுக்கு அதிக பாதிப்பும், அதிக உயிரிழப்பு, காயமும் ஏற்பட்டது. இந்த ரயில் பெட்டிகள் டவுன் லைனில் தடம் புரண்டு, மணிக்கு 126 கி.மீ., வேகத்தில் வந்த யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரசின் கடைசி இரண்டு பெட்டிகள் மீது மோதியது.
பாதிக்கப்பட்டவர்கள் 139 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். ரயில்வே அதிகாரிகள் பதில் அளிப்பார்கள். விபத்திற்கான காரணத்தை கண்டுபிடித்துவிட்டோம். ஆனால், அது சிக்கல் ஆனது. பெரிய காயம் அடைந்தவர்களுக்கு நிவாரணமாக தலா ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும். லேசான காயம் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (13)
No more reasons....
வெளிநாட்டில் போய் உட்கார்ந்து இந்திய அரசியல் பேசுபவன் முதலில் முட்டாள்-150 வருடங்கள் புழக்கமுள்ள இதே தண்டவாளங்களில் பிரிட்டிஷ் ரயில் ஓட்டியது-அன்று நெரிசல் குறைவு வண்டிகள் குறைவு-இன்றோ அது பல மடங்கு கூடுதல்.நெரிசலும் கூடுதல்-இடையிடையே அத்துறை வல்லுனர்களும் ஆராய்ச்சிகள் மூலம் பல நுட்பங்களை புகுத்திய போதும் ரயிலின் கட்டமைப்பு அதன் எடை முழுவிசை இயக்க கட்டுப்பாடென பல சிக்கல்கள் கொண்டுள்ளது-இதில் பல்சக்கரங்களை நம்பி இயங்கும் பொறிகள் எப்போது தவறிழைக்குமென்பது யாருக்குமே தெரியாது-எனவே பொறியியல் கோளாறெனில் மேலிருந்து வரவேண்டும்
இதோடு செய்திகள் முடிவடைகிறது கூட்டத்தைகளைத்து விடவும் நடந்த விபத்திற்கு எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது சிக்னல் ப்ரோப்லேம் நங்கள் யாரும் பொறுப்பு கிடையாது நங்கள் ராஜினாமா செய்யமாட்டோம் . பயணிகளின் பாதுகாப்பு எங்கள் கைகளில் இல்லை ரயில்வே பட்ஜெட் ஒளித்தோம் தனியாருக்கு கொடுத்தோம் kavachi வாங்க பணம் ஒடுக்கினோம் அது எங்கே ஒதுங்கி இருக்கிறது என்று குழு வைத்து கண்டுபிடிப்போம்
மூணு மாதம் முன்பு இருந்து இந்த சிக்னல் பிரஜனை இருந்து இருக்கிறது மேல் இடத்தில இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை . ஏழைகள் தான் பாவம் .
கோரமண்டல் என்றால் சோழமண்டலம் என்று பொருள். செங்கோலுடன் பொருத்திப் பார்த்துக் கொள்ளவும். தவிர விருச்சிகராசிக் காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி வேற.