Load Image
Advertisement

மின்னணு இன்டர்லாக் மாற்றத்தால் விபத்து: ஆய்வுக்கு பின் ரயில்வே அமைச்சர் அஸ்வினி பேட்டி

புவனேஸ்வர்: ரயில் விபத்துக்கான மூல காரணம் கண்டறியப்பட்டுள்ளது. மின்னணு இன்டர்லாக் மாற்றத்தால் விபத்து நடந்துள்ளது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வுக்கு பின் நிருபர்கள் சந்திப்பில் கூறினார்.

Latest Tamil News

ஒடிசா மாநிலம் பாலசோரில் ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரம் நடக்கிறது. தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ரயில் விபத்து நடந்த இடத்தில், 2வது நாளாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பேட்டி: கோரமண்டல் ரயில் விபத்தில் அனைத்து சடலங்களும் அகற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில் பாதையை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வரும் புதன் கிழமைக்குள் சீரமைப்பு பணிகள் முடிந்து, ரயில் சேவையை மீண்டும் துவக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு செய்து விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இந்த விபத்துக்கான மூல காரணம் கண்டறியப்பட்டுள்ளது. மின்னணு இன்டர்லாக் மாற்றத்தால் விபத்து நடந்துள்ளது. தற்போது மீட்பு பணிகளில் கவனம் செலுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


பிரதமர் ஆலோசனை

மீட்பு பணியை ஆய்வு செய்த அஸ்வினி வைஷ்ணவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது மீட்பு பணிகள், தண்டவாள சீரமைப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்து மோடி கேட்டறிந்தார்.

Latest Tamil News

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டு திருப்பி விடப்பட்டுள்ளன. தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.வாசகர் கருத்து (24)

 • Jaykumar Dharmarajan - Madurai,இந்தியா

  இரயில்வே துறையில் பல நவீன மாற்றங்கள் செய்வதற்கு முன் - ஸ்லீப்பர் என்ற் கட்டைகள் மேல் தண்டவாளங்களைப் பதித்து அதை இணைக்க ஃபிஷ் பிளேட் என்ற இரும்பு இணைப்புகளை ஊழுயர்கள் நடந்தே சென்று சரியாக உள்புறமாக சுத்தியலால் தட்டி விடுவார்கள். அந்த நிலை மாறி அனைத்து இடங்களிலுமே சிமெண்ட்டால் ஆன தளத்தில் மேல் தான் இப்போது இரயில் வண்டி ஓடுகிறது. அதன் பின் ஆட்களில்லாத ரெயில் கிராஸ்ஸிங்குகளில் பல முறை பலதரப்பட்ட வாகனங்கள் மோதி உயிர்ப்பலி நடந்து வந்தது. இப்போது அதற்கும் முடிவு வந்துவிட்டது. புராணகாலங்களில் விரைவு வண்டிகளில் இஞ்சினிலிருந்து கொடுக்கப்படும் வளையம் மூலம், தண்டவாளங்களை ஒரு நபர் மாற்றுவது வழக்கமாக இருந்தது. தற்சமயம் அனைத்து நவீன உபகரணங்கள் மூலம் அனைத்து ரயில்களும் விரைவு வண்டிகளாக டபுள் ட்ராக் மூலம் தடையின்றி ஓடிக்கொண்டு இருக்கின்றன. எவ்வள்வு தான் மனிதன் முயற்சி செய்தாலும்- சில நேரங்களில் சிறியதாகவும், பல நேரங்களில் கோராவிபத்துகளும் தவிற்க முடியாமல் போகிறது, என்பது வேதனைக்குறிய விஷயமே

 • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

  40% கமிஷன் அடிச்சிட்டு வாங்கினதாக இருக்கும். 40% நேரங்களில் வேலை செய்யாது. உயிர் காக்கும் இந்த பாதுகாப்பு உபகரணங்கள் fault tolerant ஆக வடிவமைக்கப்பட்டிருக்கும்.With Redundancy at all levels. அதற்கு முழு பணம் தந்திருக்க வேண்டும்.

 • அப்புசாமி -

  இண்டர்லாக்கிங் சிஸ்டத்தைப்.போட்டுவிட்டால்.போதுமா? எல்லாத்துக்கும்.பிளான் B ந்னு ஒண்ணு வெச்சிருக்கணும்டா. எல்லா ரயில்பெட்டிகளிலும் கதவுகள்.இருந்தாலும் எமர்ஜென்சி எக்சிட் நு ஒண்ணு இருக்கறதை பாத்ததே இல்லியா? எலக்ட்ரானிக் சிஸ்டத்துக்கு மாற்றாக இன்னொரு ஜி.பி.எஸ் சிஸ்டம் வெய்யுங்க. பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் Tandem computers உபயோகிக்கிறாங்க. உள்ளே ஒவ்வொரு சி.பி.யூ, ஹார்ட் டிஸ்க், மிண்ணணுப் பாதை எல்லாத்துக்கும்.ஒரு டூப்ளிகேட் இருக்கும். அதனால்தான் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் தடையில்லாம ஓடுது. ரயில் பாதையின் குறுக்கே பொருள் கிடந்தா டிரைவருக்கு 50 கிலோ மீட்டருக்கு முன்னாஇ அலர்ட் பண்ற மாதிரி சிஸ்டம் வெய்யுங்க. பிரதமர் பேசுனா மாத்திரம் ஆயிரத்தெட்டு சேனலில் கோடிக்கணக்காண மக்கள் பாக்குற மாதிரி செய்யமுடியுது. ஒவ்வொரு ரயில் இஞ்சினிலும் டேஷ்போர்டில் மானிட்டர் வெச்சு ஒரு 25 கிலோ மீட்ட்ர் அளவில் தண்டவாளம் தெரியும்படி செய்யுங்க.

 • V.Saminatha - ,

  மின்னணு தகவல் சாதனங்கள் மிக எளிதில் தவறிழைப்பவை-நவீன தராசின் தரமே அதைச் சொல்லும்-இதில் செயற்கைகோள் அமைப்பும் இணைந்தால் தவறு நிகழ்வது நிச்சயம்-அதற்கு நமமு ெல்போன்களே சாட்சி.

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  எதிரும் புதிருமாக இரண்டு இரயில்களை அனுமதிக்காமல் இருக்க பிணைப்பு (இண்டர்லாக்) இருக்க வேண்டும். அதை நிர்மானிக்கும் பொழுது வன் பொருள் மற்றும் மென்பொருள் ஆகிய இரண்டையும் சரிபார்த்திருக்க வேண்டும். கூடுதலாக அமைப்புக்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு இருக்க வேண்டும். இவையெல்லாம் ஐஇசியின் பரிந்துரைகள் 61508 ன்படி இருக்க வேண்டும். சமீபகாலமாக ஐ எஸ் ஓ 26262 பரிந்துரையின் படி ஏசில் சி அல்லது டி என்ற வகைப்படுத்தி மென்பொருள் மற்றும் வன்பொருள்கள் சரிபார்த்திருக்க வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்