ADVERTISEMENT
சோழவந்தான் : சோழவந்தான் அருகே மேலக்காலில் நீரோடை ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் அதிகாரிகள் காலம் கடத்தி வருவதால், விவசாயிகள் அல்லல்படுகின்றனர்.
இப்பகுதி அய்யாச்சாமி ஓடை ஆக்கிரமிப்பால் சுருங்கி வாய்க்கால் போல மாறியுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற கொடிமங்கலம் கிராம வனப் பாதுகாப்பு குழுத் தலைவர் சாந்தி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார். இதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி, கடந்த 2020ல் வாடிப்பட்டி தாசில்தாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பின்னும் அதிகாரிகள் 3 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பை அகற்றாமல் இழுத்தடிப்பு செய்கின்றனர். இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைக்கின்றனர்.
விவசாயி கணேசன்: நீரோடையின் கரை வழியே நாகமலை அடிவார பகுதி வரை நடந்து செல்லலாம். தற்போது நீரோடையை சிலர் ஆக்கிரமித்துள்ளதால்அப்படி செல்ல இயலவில்லை. இதனால் 2 ஆண்டுகளாக 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்ய முடியாமல் தவிக்கிறோம். தற்போது நீர்வரத்து இன்றி வாய்க்கால், கிணறு, குளம் உள்ளிட்டவை வறண்டு கிடக்கின்றன, என்றார்.
கிராம வனப் பாதுகாப்பு குழுத் தலைவர் சாந்தி: ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். இவ்வழக்கை விசாரித்தும், வருவாய்த்துறை சர்வே செய்தும், ஆக்கிரமிப்பு உள்ளதை உறுதி செய்து அகற்றும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் 2 ஆண்டுகள் நிறைவடைந்தும் அரசு அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர். அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து நீதிமன்றத்தில் முறையிட உள்ளேன், என்றார்.
உண்மை