ADVERTISEMENT
விழுப்புரம்-விழுப்புரத்தில் வைகுண்டவாச பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.
அதனையொட்டி, நேற்று காலை 7:30 மணிக்கு வைகுண்டவாச பெருமாள், ஜனகவள்ளி தாயாருடன் சிறப்பு அலங்காரத்தில், தேரில் எழுந்தருளச் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விழுப்புரம் சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று பெருமாளுக்கு புஷ்ப யாகம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!