Load Image
Advertisement

மக்கர் செய்த மைக்: வீசி எறிந்த முதல்வர்

"Mike" made by Mucker: The principal who threw away   மக்கர் செய்த மைக்: வீசி எறிந்த முதல்வர்
ADVERTISEMENT
ஜெய்ப்பூர்: அரசு திட்டங்கள் குறித்து மகளிடரிடம் கலந்துரையாடிய போது ''மைக்'' மக்கர் செய்ததால் பொறுமை இழந்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மைக்கை வீசி எறிந்த சம்பவம் வீடியோவாக வைரலாகி வருகிறது.

ராஜஸ்தான் சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இம்மாநிலத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். உடனே ஆளும் காங். முதல்வர் அசோக் கெலாட், நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 100 யுனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.

Latest Tamil News
இந்நிலையில் பார்மர் மாவட்டத்தில் நடந்த மக்கள் சந்திப்பு முகாமில், அரசின் நலத்திட்டங்கள் குறித்து மகளிர் கூட்டத்தில் கலந்துரையாடினார்.அப்போது அவர் பேசவிருந்த ''மைக்'' மக்கர் செய்தது. இதனால் பொறுமை இழந்த அசோக் கெலாட் மைக்கை வீசி எறிந்தார்.உடனே அருகில் இருந்த பெண் ஒருவர் வேறு மைக்கை நீட்டினார். அதனை வாங்கி பேச துவங்கினார்.''மைக்''கை வீசி எறியும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


வாசகர் கருத்து (8)

  • Ramaraj P -

    000

  • Bye Pass - Redmond,யூ.எஸ்.ஏ

    முதல்வரா வருவதரக்கு முன் மேஜிக் ஷோ காட்டி பிழைப்பு நடத்தினார் ..

  • நரேந்திர பாரதி - சிட்னி,ஆஸ்திரேலியா

    எல்லாமே மக்கர்தான்...

  • Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ

    மக்கள் முன்னாடி இப்படி கோவமா நடப்பது முதல்வர் பதவிக்கு தகுதியற்றவர் .

  • பரலோகம் - Chennai,இந்தியா

    தமிழகத்தை போலவே ராஜஸ்தானிலும் பெண்களுக்கு இலவச பஸ்ன்னு அறிவிக்கலாமுங்கும்போது மைக் வேல செய்யாம போயிருக்கும் அதான் டென்ஷன் ஆயிட்டார் . திராவிட மாடல் ராக்ஸ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்