
மாலை வ.உ.சி., மைதானத்தில்
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த, நம் சகோதர, சகோதரிகளுக்கு, ‛தினமலர்' சார்பில், அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, கோவை - அவிநாசி ரோட்டில் உள்ள, வ.உ.சி., மைதானத்தில், இன்று (ஜூன்.,4)ம் தேதி, மாலை, 5:30 மணிக்கு நடைபெற்றது.
ஈரமுள்ள நெஞ்சங்களின் இரங்கல்களால்
துயரமும் பாரமும் தொலையட்டும்!
அன்பானவர்களின் அஞ்சலியால் அந்த ஆன்மாக்கள் அமைதியில் இளைப்பாறட்டும்!

வாசகர் கருத்து (21)
விபத்தில் இறந்த அணைத்து மக்களின் ஆன்மாக்கள் சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்
திறமையானவர்களை இதுபோன்ற பணியில் அமர்த்தவேண்டும். படிப்பறிவு, வாங்கும் சம்பளத்துக்கு நேர்மையாக பணிபுரிதல், இப்படிப்பட்டவர்களை பணியில் அமர்த்தி இருந்தால் இதுபோன்ற விபத்துக்கள் தடுக்கப்படலாம் பிற்காலத்தில். சிபாரிசு மூலம், மற்றும் லஞ்சம் கொடுத்து பணியில் சேர்வது போன்றவை கண்டிப்பாக நிறுத்தப்படவேண்டும். மது அருந்திவிட்டு வேலைக்கு வருவது, பான்பராக் போட்டுகொண்டு அடிக்கடி வெளியேசெல்வது - துப்புவதற்காக, மற்றும் மொபைல் போனில் பேசி அரட்டை அடிக்கும் நபர்களை உடனே வேலையை விட்டு தூக்கவேண்டும். ஆழ்ந்த இரங்கல்கள். இனிமேல் இப்படி ஒரு விபத்து நடக்க கூடாது இறைவா.
தினமலரின் நன் முயற்சிக்கு நன்றி ... மறைந்த உயிர்களுக்கு நற்கதி கிடைக்கட்டும் ...
ஆழ்ந்த இரங்கல்
உயிரிழந்தவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்துவது இருக்கட்டும். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரயில்வே நிர்வாகத்தின் காப்பீடு கிடைக்குமா...? அப்படியிருந்தால் அதைப் பெறுவதற்கு வழி என்ன... என்பது பற்றியும் தெரிவியுங்கள். அதே நேரத்தில் ஆத்மநிர்பார் திட்டம், க்வாச் சாதனம் என்னவானது என்ற கேள்விக்கும் பதிலளியுங்கள். ஆனால் ஒன்று மட்டும் உறுதி ரயில் அரசின் பொதுத்துறையில் இருப்பதால் தான் அரசு இழப்பீடு வழங்குகிறது. தனியாரிடம் சென்றால் நிச்சயம் கிடைக்காது என்ற உண்மையையும் மக்களுக்குச் சொல்லுங்கள். நல்லதோ, கெட்டதோ எதுவாக இருந்தாலும் அது அரசின் கட்டுப்பாட்டில், அரசின் மேற்பார்வையில் இருப்பது தான் நல்லது.