Load Image
Advertisement

ஒடிசா ரயில் விபத்து: நாகேஸ்வர் கோவில் பிரளயகாலருதிரர் சன்னதியில் கையில் விளக்கேற்றி இந்து மகா சபாவினர் வழிபாடு

தஞ்சாவூர்,- ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையவும், காயமடைந்தோர் குணமடையவும் வேண்டி, கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில், பிரளயகாலருதிரர் சன்னத்தியில், இந்து மகா சபாவினர் கையில் விளக்கேற்றி வழிபட்டனர்.

Latest Tamil News


ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில், இறநத்வர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும். காயமடைந்தோர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். இனியும் மரணம் தொடரக்கூடாது என்பதற்காக, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் உள்ள பிரளயகாலருதிரர் சன்னதியில், ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராம நிரஞ்சன், மாவட்டத் தலைவர் சுந்தர்ராஜன், ஆலய பாதுகாப்பு பிரிவு மாவட்ட தலைவர் விஜயன் உள்ளிட்ட நிர்வாகிகள் கையில் அகல் விளக்கை ஏற்றி, வழிபட்டனர்.

Latest Tamil News

இது குறித்து ராமநிரஞ்சன் கூறியதாவது; பிரளயகாலருதிரரை, எமகண்டத்தில் அபிஷேகம் செய்து வழிபட்டால், சத்துரு உபவாதைகளும், ஆயுள் விருத்தியும், வியாதிகள் நீங்கும் என்பது ஐதீகம். இதனால், ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் எந்த வியாதியும் இல்லாமல் நலம் பெற வேண்டும். இறந்தவர்கள் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என வழிபாடு நடத்தப்பட்டது இவ்வாறு அவர் தெரிவித்தார்.


வாசகர் கருத்து (4)

  • Subramanian -

    ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

  • Ellamman - Chennai,இந்தியா

    கூடவே பொறுப்பு ஏற்கும் தைரியமும் தார்மீக பொறுப்பு பற்றி ஆட்சியில் இருப்பவர்களுக்கு சொல்லித்தரும்படி கூட கடவுளை வேண்டுவோம்

  • Vijay - Chennai,இந்தியா

    நல்ல விஷயம்

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    விபத்தில் உயிரிழந்த அனைத்து ஆன்மாக்களும் சாந்தியடைய வேண்டுகிறேன். மேலும் காயமடைந்தவர்கள் சீக்கிரம் பூரண குணம் அடைய வேண்டிக்கொள்கிறேன். இனி இதுபோல் விபத்துக்கள் நடக்காமல் கவனிக்கவேண்டியது ரயில்வேயின் பொறுப்பு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்