Load Image
Advertisement

தந்தையை கொன்ற மகன் கைது வேப்பூர் அருகே பயங்கரம்

 Son arrested for killing his father, terror near Veypur    தந்தையை கொன்ற மகன் கைது வேப்பூர் அருகே பயங்கரம்
ADVERTISEMENT
வேப்பூர் அருகே தந்தையை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த ஏ.சித்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி, 60. இவரது மனைவி மாலா. இவர்களது மகன் குணா, 24. இவர் ஏ.சித்துாரில் உள்ள உரம் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்

இவர்களுக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால், மாலா, குணா ஆகியோர் விருத்தாசலத்தில் வசிக்கின்றனர். இந்நிலையில், நேற்று மதியம் 2:00 மணியளவில் குணா வேலை செய்யும் கம்பெனிக்கு ரங்கசாமி வந்தார். குணாவிடம் தகராறில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த குணா, தந்தையை கட்டையால் தாக்கினார். படுகாயமடைந்த ரங்கசாமி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில், வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து, குணாவை கைது செய்து, விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement