பாச நண்பனின் இறப்பை தாங்க முடியாது உயிர் நண்பனும் விபரீதமாய் அதே முடிவு
ராணிப்பேட்டை அருகே, தற்கொலை செய்து கொண்ட நண்பரின் பிரிவை தாங்க முடியாமல், அவரது உயிர் நண்பரும் தற்கொலை செய்து கொண்டார்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சோமசுந்தரம் நகரைச் சேர்ந்தவர் விஷால், 19; பெயின்டர். வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர், மே 28 இரவில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விஷாலின் உயிர் நண்பரான அஜித், 20, துாக்கில் தொங்கிய நண்பனை கீழே இறக்கி கதறி அழுதார். டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், விஷால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
கடந்த, 30 இரவில் விஷால் புதைத்த இடத்தில் மதுவை ஊற்றி, ஸ்வீட், பழங்களை படையலிட்டு அங்கேயே உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை, 3:00 மணிக்கு, விஷால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட அதே கயிற்றில், அஜித்தும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நானும் வருகிறேன்
அவரது உறவினர்கள், விஷால் உடல் புதைத்த இடத்திற்கு பக்கத்திலேயே, அஜித் உடலையும் புதைத்தனர். அஜித் இறப்பதற்கு முன் அதிகாலை, 2:50 மணிக்கு விஷாலுடன் எடுத்துக் கொண்ட படங்களை, 'வாட்ஸ் ஆப்'பில் ஸ்டேட்டஸ் வைத்து, 'நானும் வருகிறேன்' என, பதிவிட்டிருந்தார்.
அஜித் பெயரை விஷாலும், விஷால் பெயரை அஜித்தும் மார்பில் பச்சை குத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இணை பிரியாத நண்பர்கள் இருவரும், அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!