Load Image
Advertisement

20 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல் சுற்றி வளைத்த கடலோர காவல்படை

20 crore gold smuggling busted by Coast Guard    20 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல் சுற்றி வளைத்த கடலோர காவல்படை
ADVERTISEMENT
ராமநாதபுரம்: இந்தியாவுக்கு கடல் வழியே சட்டவிரோதமாக கடத்தப்பட்ட, 20.20 கோடி ரூபாய் மதிப்பிலான 32.87 கிலோ தங்கத்தை, இந்திய கடலோர காவல் படை மற்றும் வருவாய் புலனாய்வு துறை நடத்திய கூட்டு நடவடிக்கையில் பறிமுதல் செய்தனர். அத்துடன், இந்த கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா-இலங்கை கடல் எல்லையில் இருக்கும், மன்னார் வளைகுடா பகுதி மூலம் இந்தியாவுக்குள் தங்கம் சட்டவிரோதமாககடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு துறை, இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தது. இதை தொடர்ந்து, வருவாய் புலனாய்வு துறை,கடலோர காவல் படையுடன் ஒன்றிணைந்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது, ராமநாதபுரம் மண்டபம் துறைமுகத்தை நோக்கிசந்தேகத்திற்கிடமான மீன்பிடி படகு ஒன்று வந்தது. இதை சோதனை செய்ய முற்பட்ட போது,படகில் இருந்தவர்கள் பதுக்கப்பட்டதங்கக்கட்டிகளைகடலில் வீசிவிட்டு,தப்ப முயன்றனர். இந்த படகை துரத்திப் பிடித்த இந்திய கடலோர காவல்படை, அதில் இருந்த மூன்று பேரை கைது செய்தனர். மேலும், கடலில் வீசப்பட்ட 11.60 கிலோதங்கக்கட்டிகள், 2 நாள் தேடுதல் வேட்டைக்கு பிறகு பறிமுதல் செய்யப்பட்டன.

அதே, மற்றொரு சம்பவத்தில்,தெற்கு மண்டபம் பகுதியில் உள்ள விடலை கிராமத்தை நோக்கி சந்தேகத்திற்குகிடமான இன்னொரு மீன்பிடி படகு வந்தது. இந்த படகை மடக்கி, வருவாய் புலனாய்வு துறை சோதனை செய்தனர். இதில், பதுக்கி வைக்கப்பட்ட 21.27 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டனர்.

மொத்தம், பரிமுதல் செய்யப்பட்ட 32.87 கிலோ தங்கம் உட்பட கைது செய்யப்பட்ட ஐந்துநபர்கள் அனைவரும், அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக வருவாய் புலனாய்வு துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement