ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று மாலை 6:50 மணி முதல் 7:10 மணிக்குள் 3 ரயில்கள் மோதிக்கொண்டன. அதில், ரயில்பெட்டிகள் சிதைந்ததுடன், ஒரு சில பெட்டிகள் ஒன்றின் மீது ஒன்று விழுந்தன. பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து அகற்றப்படுவதற்கு முன்னர், நீண்ட உயரத்திற்கு தூக்கி செல்லப்பட்டது. இந்த விபத்தில் 17 பெட்டிகள் மோசமாக சேதம் அடைந்துள்ளன. விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.
இந்நிலையில் சரக்கு ரயில் நின்று கொண்டிருந்த தண்டவாளத்தில் கோரமண்டல் ஷாலிமர் ரயில் எப்படி வந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு தொழில்நுட்ப கோளாறா அல்லது மனிதத் தவறு காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சிக்னல் கோளாறுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக பலர் கருத்து தெரிவித்து உள்ளனர்.
கவாச்
ரயில்கள் மோதுவதை தடுக்கும் கவாச் எனும் தொழில்நுட்பத்தை அனைத்து ரயில்களிலும் பொருத்தும் நடவடிக்கைகளில் ரயில்வே அமைச்சகம் ஈடுபட்டு வருகிறது. இந்த தொழில்நுட்பம், ஒரே தண்டவாளத்தில் மற்றொரு ரயில் வந்தால், விபத்துகளை தவிர்க்கும் வகையில், டிரைவருக்கு எச்சரிக்கை அளிக்கும். ரயில் பிரேக்குகளை டிரைவர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து ரயிலை நிறுத்தி விபத்துகளை தடுக்கும் வகையில் செயல்படும்.
ஆனால், விபத்து நடந்த பாதைகளில் இந்த கவாச் கருவி பொருத்தப்படவில்லை என ரயில்வே வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இந்த விபத்தில் கோரமண்டல் ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரயிலின் தூங்கும் வசதிகள் கொண்ட பெட்டி மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளதும் தெரிய வந்துள்ளது.
வாசகர் கருத்து (25)
சிக்னல் துறையி ல் l நவீன தொழில் நுட்பம் இல்லை. ஹைதர் காலத்து முறையே உள்ளது. சீர்திருத்தம் கொண்டு வந்தால் தொழில் சங்க போராட்டம். விபத்தை தவிர்க்க முடியாது. ஒரே வழி நவினா விஞ்ஞாந முன்னேற்றங்களை செயல் படுத்த வேண்டும். ஓடும் ரயிலில் புதுமை. ஆனால் ஓடும் தண்டவாளத்தில் இன்னும் பழமையே.
கவாச் இல்லை கவசம், இந்தியில் கவச் .
இந்தியன் ரயில்வேயில் பல கருப்பு ஆடுகள் உள்ளன. NIA இடம் இந்த விசாரணை ஒப்படைக்க பட வேண்டும்.
ஒரு சில மனித தவறுகளை விட்டுவிட்டு அரசை குறை சொல்வது ஞாயமில்லை. தற்போதைய தேவை வேகமில்லை, பாதுகாப்பான பயணம் மட்டுமே. எனவே அரசாங்கம் கவச் உபகரணத்தை எல்லா ரயில்களிலும் உடனடியாக பொருத்தி மக்களை காக்க வேண்டும்.
நாட்டின் அதிமுக்கிய துறைகளின் அமைச்சர்கள் எல்லோரும் ராஜ்யசபை உறுப்பினர்கள். அவ்வ்ளோ பயம்.. கட்சிக்காரங்க மேலே.. என்ன செய்து சொதப்பிவிடுவார்களோ என்ற பயம். இல்லை எங்கே பெயரை தட்டிக்கொண்டு போய்விடுவார்களோ என்ற நம்பத்தன்மை.