Load Image
Advertisement

இந்தியாவில் இதுவரை நடந்த ரயில் விபத்துக்கள்?

புதுடில்லி: ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. அதில் சிக்கிய பயணியரை மீட்கும் பணி நடைபெறுகிறது. இந்தியாவில் இதுவரை ஏற்பட்ட முக்கிய ரயில் விபத்துகள் விபரம் பின்வருமாறு:

Latest Tamil News
டிச.,23 1964
பாம்பன் - தனுஷ்கோடி இடையிலான ரயில் சூறாவளியில் சிக்கியதில் 126 பேர் உயிரிழந்தனர்.


ஜூன் 6 1981
பீஹாரில் பாக்மதி ஆற்றில் ரயில் விழுந்த விபத்தில் 750 பேர் பலி

ஆக.,20 1995
உ.பி.,யின் பிரோசாபாத் நகரில் புருஷோத்தம் எக்ஸ்பிரஸ், நின்று கொண்டிருந்த கலிந்தி எக்ஸ்பிரஸ் மீது மோதியது. இதில் 305 பேர் உயிரிழந்தனர்.

நவ.,26 1998
பஞ்சாபில், தடம்புரண்ட பிரான்டியர் தங்க கோயில் ரயிலின் ஜம்மு - தவிசில்டா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 212 பேர் பலி

ஆக.,2 1999
மேற்கு வங்க மாநிலம் கய்சல் ரயில் நிலையத்தில், பிரமபுத்ரா மெயில், அவாத் அசாம் எக்ஸ்பிரஸ் மீது மோதியதில் 285 பேர் பலி. 300 பேர் காயம் . இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் ராணுவம், பிஎஸ்எப் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள்.
டிச., 3, 2000
பஞ்சாபில், ஹவுரா - அமிர்தசரஸ் ரயில் தடம் புரண்டதில், 46 பேர் பலி

ஜூன் 22, 2001
கேரளாவின் கோழிக்கோட்டில், மங்களூரு - சென்னை மெயில் தடம் புரண்டதில், 57 பேர் பலி

செப்., 9, 2002
பீஹாரின் அவுரங்காபாதில், ஹவுரா - புதுடில்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு ஆற்றுக்குள் கவிழ்ந்ததில், 130 பேர் பலி; 150 பேர் காயம்ஜூன் 22, 2003
மஹாராஷ்டிராவில் உள்ள சிந்துதுர்காவில், கார்வார் - -மும்பை ரயில் தடம் புரண்டதில், 53 பேர் பலி


மே 28 2010
ஜனனேஸ்வரி எக்ஸ்பிரஸ், மேற்கு வங்கத்தின் ஜர்கிராம் ரயில் நிலையத்தில், சரக்கு ரயில் மோதியதில் தடம் புரண்டது. அதில் 148 பயணிகள் பலியானார்கள்.
ஜூலை 10, 2011
மேற்கு வங்கம் ஹவுராவில் இருந்து புதுடில்லி சென்ற பயணியர் ரயில், உ.பி.,யின் மால்வோவில் தடம் புரண்டதில், 35 பேர் பலி; 200 பேர் காயம்

ஜூன் 25, 2014
பீஹாரில், புதுடில்லி - திப்ரூஹர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில், ஐந்து பேர் பலி

பிப்., 13, 2015
ஓசூர் அருகே ஆனைக்கல்லில், பெங்களூரு -- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில், 12 பேர் பலி

மார்ச் 20, 2015
உ.பி.,யின் ரேபரேலி அருகே வாரணாசி - டேராடூன் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 58 பேர் பலி
Latest Tamil News

மே 25, 2015
உ.பி.,யில் முரி எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில், ஐந்து பேர் பலி

ஆக., 5, 2015
ம.பி.,யின் ஹர்தாவில் இரண்டு ரயில்கள் தடம் புரண்டதில், 29 பேர் பலி

நவ.,26 2015

உ.பி., மாநிலம் கான்பூரில் புக்ரயான் ரயில் நிலையத்தில இந்தூர் ராஜேந்திர நகர் ரயிலின் 14 பெட்டிகள் தடம்புரண்டு 152 பேர் பலி 260 பேர் காயம்
நவ., 20, 2016
உபி.,யின் கான்பூர் அருகே இந்துார் - பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டதில், 150 பேர் பலி; 250 பேர் காயம்

ஜன., 21. 2017
விசாகப்பட்டினத்தில் ஹிராகண்ட் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில், 41 பேர் பலி

Latest Tamil News

ஆக., 19, 2017
ஒடிசாவின் புரி - உ.பி.,யின் ஹரித்துவார் இடையிலான கலிங்கா உட்கல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதில், 20 பேர் பலி

அக்., 19, 2018
பஞ்சாபின் அமிர்தசரசில் தசரா கொண்டாட்டத்தில் தண்டவாளத்தில் நின்றிருந்தவர்கள் மீது ரயில் மோதியதில், 61 பேர் பலி

ஜூன் 2, 2023
ஒடிசாவின் பாலசோர் பகுதியில் நடந்த ரயில் விபத்தில் பலர் பலி.


வாசகர் கருத்து (16)

 • Som - Dindigul,இந்தியா

  மந்திரிகள் மட்டும் அல்ல. அதிகாரிகளும் தாமதமின்றி தண்டனை வழக்க வேண்டும்

 • Som - Dindigul,இந்தியா

  நன்றி. விபத்து விபரங்களுக்கு. அந்த விபத்துகளுக்கு யார் பொருப்பு? அவர்கள் அடைந்த தண்டநை என்ன ? நம் சட்டங்கள் சரியாக நடைமுறை படுத்தப்படுவதில்லை. ஒரு வருடத்திற்குள் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் இல்லாவிடில் இது தொடர் கதை யாகவே இருக்கும்.

 • S.Yuvaraj - Abuhailfa,குவைத்

  The Ariyalur train accident, It occurred on November 23, 1956, leaving 142 passengers dead and 110 injured.

 • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

  2000 க்கு முன்னால் ராம்விலாஸ் பாஸ்வான் ரயில்வே மந்திரியாயிருந்த போது நடந்த விபத்துகள் அதிகம். விவரம் போடுங்க..

 • venkatapathy - New Delhi,இந்தியா

  அதற்கெல்லாம் முன்பு அரியலூரில் ரயில் விபத்து ரொம்ப பேமஸ் அரியலூரில் நடந்த ரயில் விபத்துக்காக அப்போதைய ரயில்வே மந்திரியாய் இருந்த லால்பகதூர் சாஸ்திரி அதற்க்கு மந்திரி என்கிற நிலையில் பொறுப்பேற்று ராஜினாமா செய்து பதவி விலக்கினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement