சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 100வது பிறந்தநாள் நாளை (ஜூன் 3) திமுக.,வினர் விமரிசையாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர். நூற்றாண்டு விழாவிற்கான லோகோவை மேற்குவங்க முன்னாள் கவர்னர் கோபாலகிருஷ்ண காந்தி முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது: நாங்கள் திராவிட இயக்கத்தை சார்ந்தவர்கள் என்றாலும் காந்தியடிகள் இயக்கத்துடன் எங்களுக்கு தொடர்பு உண்டு என்பதை அறிந்தவர் கோபாலகிருஷ்ண காந்தி. இங்கு வந்து பேசியது என் வாழ்நாளில் கிடைத்துள்ள மாபெரும் பேறு. அந்த பெருமையை காப்பாற்றும் வகையில் நான் நடந்து கொள்வேன். தமிழ் மொழிக்கு உயிராக இருந்தவர் உதயமான நாள் நாளைய தினம்.
என் தலைமையலான திராவிட மாடல் அரசை கருணாநிதிக்கும், கருணாநிதியின் புகழுக்கும் காணிக்கையாக்குகிறேன். நவீன தமிழகத்தின் சிற்பி கருணாநிதி, அவர் தொடாத துறைகளே இல்லை, அவர் போட்டு தந்த பாதையிலே அனைத்து துறைகளும் செயல்படுகிறது. சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் அதிக தொழில் நிறுவனங்கள் உருவாக காரணம் கருணாநிதி. திராவிட மாடல் அரசு தொழில் புரட்சியை உருவாக்கி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, கலைவாணர் அரங்கத்தில், கருணாநிதி நூற்றாண்டு விழாவினையொட்டி செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
வாசகர் கருத்து (16)
இறந்தவருக்கு நூற்றாண்டு விழா ? எந்த பகுத்தறிவில் இது சேர்த்தி ?
தமிழ் மொழிக்கு உயிராக இருந்தவர் உதயமான நாள் நாளைய தினம்....அவரு வர வரைக்கும் தமிழ் உயிர் இல்லாமல் இருந்ததாக்கும்...இருபத்தஞ்சு வருஷம் ஆட்சியை கையை வைச்சிட்டு, அவரு ரொம்ப தொழிலை ஆரம்பிச்சு தொழில் செயதாருன்னு சொல்வது சரியா தெரியலை. கொஞ்ச காலம் ஆண்டாலும் காமராஜ் ஆரம்பிச்ச தொழிற்சாலைகளும் அணைகளுக்கும் கல்வி திட்டங்களுக்கும் இணையாகுமா? தலைவரு இரும்பத்தஞ்சு வருஷத்துக்கு மேல அடிச்ச கொள்ளைகளுக்கும் உயிரா உடம்பா இருந்தாருன்னும் சொல்லலாம்.
அந்த படத்தில் உள்ள அந்த லோகோ ஏதோ ஒரு ஜெர்மன் நிறுவனத்தின் லோகோ என்று பலபேர் கூறுகிறார்கள். ஜெர்மன் நாட்டிலிருந்து திருட ஆரம்பித்துவிட்டார்களா...? ஜெர்மன் நிறுவனத்திற்கு இந்த திருட்டு பற்றி தெரியுமா..?
ரயில் கக்கூஸ லோகோவா வச்சிருந்தா பொருத்தமா இருக்கும்
தகப்பன் ஆட்சியில் சர்க்கரை மற்றும் சாக்குகளை எறும்பு மற்றும் கரையான் தின்றது மாதிரி மகனோட ஆட்சியில் 7000 நெல் மூட்டைகளை ஊழல் பெருச்சாளிகள் தின்றுவிட்டதாம்