Load Image
Advertisement

தெலுங்கானா பிறந்த கதையை அறிவோமா?

Do we know the birth story of Telangana?   தெலுங்கானா பிறந்த கதையை அறிவோமா?
ADVERTISEMENT
இன்று (ஜூன்.,2, 2023) தெலுங்கானா பகுதி, ஆந்திராவில் இருந்து பிரிந்து தனி மாநிலமாக உருவெடுத்த தினம். கடந்த 1952 ஆம் ஆண்டு துவங்கி தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட வேண்டும் என்கிற போராட்டம் தொடர்ந்து வந்தது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கு மேலாக நடைபெற்ற இப்போராட்டத்தில் பலர் உயிர் இழந்துள்ளனர்.

அவர்களது தியாகத்தின் பலனாக கடந்த 2014 ஆம் ஆண்டு தெலுங்கானாவை இந்தியாவின் 29 ஆவது மாநிலம் ஆக்க அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆணையிட்டார். மூத்த அரசியல் தலைவர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்ட்ரிய சமிதி மாநிலக் கட்சி சார்பில் அப்போது தெலுங்கானாவை தனி மாநிலம் ஆக்க பேரணிகள், போராட்டங்கள் நடைபெற்றன. பிங்க் நிற டர்பன் கட்டிய அவரது கட்சித் தொண்டர்கள் தெலுங்கானாவின் சுதந்திரத்துக்கு தெருவில் இறங்கி கொடிகள், பதாகைகள் ஏந்திப் போராடினர்.
Latest Tamil News
இது தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. மொழி ரீதியாக ஆந்திரா, தெலுங்கானா ஆகிய பகுதிகள் ஒன்றுபட்டாலும் கலாசார ரீதியான வேறுபாடு காரணமாகவும், நிர்வாக வசதிக்காவும் தெலுங்கானா தனி மாநிலமாக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்தது. ஆண்டுதோறும் தெலுங்கானாவின் சுதந்திர தினம், ஜூன் 2 துவங்கி 21 நாட்கள் அம்மாநிலத்தில் மாநில அரசால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த நாட்களில் தெலுங்கானாவின் கலாசாரத்தை வெளிப்படுத்தும் பாரம்பரிய ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும். தெலுங்கானா பிறந்த கதையை விரிவாகப் பார்ப்போம்.

ஓஸ்மானியா பல்கலை.,யில் தெலுங்கு இளங்கலைப் பட்டம் பெற்ற சந்திரசேகர ராவ், இளைஞர் காங்கிரஸில் உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையைத் துவங்கினார். பின்னர் என்டிஆரின் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து பலமுறை சட்டமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

கடந்த 2001ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து வெளியேறி தெலுங்கானா ரஷ்ட்ரிய சமிதி கட்சியைத் தொடங்கிய அவர், அடுத்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் உண்ணாவிரதம், பேரணி மூலமாக தெலுங்கானாவை தனிமாநிலம் ஆக்க அப்போதைய மத்திய காங்., அரசிடம் கோரிக்கை வைத்தார். அவரது தொடர் முயற்சி காரணமாக தெலுங்கானா விவகாரத்தை விசாரிக்க காங்., தனி கமிட்டி அமைத்தது.

தெலுங்கானா மக்களின் பல ஆண்டுகால போராட்டத்தைக் கருத்தில் கொண்டு மன்மோகன் சிங் அரசு தெலுங்கானாவை தனி மாநிலம் ஆக்க இறுதி முடிவெடுத்தது. இந்தியாவின் மிக இளைய மாநிலம் எனும் பெயருடன் தெலுங்கானா தனி மாநிலமாக உருவெடுத்தது. தென்னிந்தியாவில் நீண்டகாலம் நடைபெற்று வெற்றிகண்ட புரட்சிப் போராட்டங்களுள் தெலுங்கானா போராட்டமும் ஒன்றாக இன்று வரலாற்றில் பதிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து (3)

  • ஆரூர் ரங் -

    கிடைத்தது சுதந்திரமல்ல. தனி மாநிலம் மட்டுமே. பிரித்துக் கொடுத்த காங்கிரஸ் இரு மாநிலங்களிலும் காணாமற்😮‍💨 போய்விட்டது.

  • ஆரூர் ரங் -

    இவருக்கு வெகு காலத்துக்கு முன்பே தனித் தெலுங்கானாவுக்காக போராட்டம்😃 நடத்தினார் சென்னா ரெட்டி..பின்பு பதவி ஆசையால் காங்கிரசில் சேர்ந்து முதல்வரானார்.

  • ஆரூர் ரங் -

    இவருக்கு வெகு காலத்துக்கு முன்பே தனித் தெலுங்கானாவுக்காக போராட்டம்😃 நடத்தினார் சென்னா ரெட்டி..பின்பு பதவி ஆசையால் காங்கிரசில் சேர்ந்து முதல்வரானார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement