ADVERTISEMENT
சென்னை: ''அபாயகரமான முறையில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய மனிதர்களை இறக்கினால், ஐந்து ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும்,'' என, தேசிய துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் கூறினார்.
துாய்மை பணியாளர்களின் நலன் குறித்த ஆய்வு கூட்டம், நேற்று, சென்னையில் உள்ள குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில், தேசிய துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் பேசியதாவது:
பிரிவு, 9ல், 2 ஆண்டு சிறை, 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை மீறுவோருக்கு, 5 ஆண்டு சிறை, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
யாராவது மனிதர்களை பயன்படுத்தினால், 'சபாய் மித்ரா சுரக் ஷா சேலஞ்ச்' திட்டத்தில் துவங்கிய, கட்டணமில்லா 14420 என்ற தேசிய உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
துாய்மை பணியாளர்களின் நலன் குறித்த ஆய்வு கூட்டம், நேற்று, சென்னையில் உள்ள குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில், தேசிய துாய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் பேசியதாவது:
அபாயகரமான முறையில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தினால், மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013 பிரிவு, 7ன்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரிவு, 9ல், 2 ஆண்டு சிறை, 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை மீறுவோருக்கு, 5 ஆண்டு சிறை, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
யாராவது மனிதர்களை பயன்படுத்தினால், 'சபாய் மித்ரா சுரக் ஷா சேலஞ்ச்' திட்டத்தில் துவங்கிய, கட்டணமில்லா 14420 என்ற தேசிய உதவி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (10)
நாள் ஒன்றுக்கு 3000 ரூ சம்பளம் என்றால் நான் வேலை செய்வேன்
ஒருசிலருக்கு தண்டனை கொடுத்து இதை நிரூபிக்கவேண்டும். வெறுமனே காகிதத்தில் சட்டம் இருந்தால் மட்டும் போதாது.
இந்த மாதிரி ஒரு வேலையை ஒரு தொழிலாளி செய்யற அளவுக்கு மக்களை வெச்சிட்டு இது மாதிரி பேசுறதில் மட்டும் குறைச்சலில்லை. இது மாதிரி பேசுறதுக்கு கை நிறைய சம்பளம்.
அடிப்படை உபகரணங்கள் கூட வாங்கிக்கொடுக்காமல் ஆளை உள்ளே அனுப்புவது மனித உரிமைப்பிரச்சினை. கட்சி ஆரம்பித்ததிலிருந்து தீம்கா இதற்கு குரல் (மட்டும்) கொடுத்து வந்துள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
பெயரளவுக்கு ஒரு சட்டம் தேவை கண்கானிப்பு