Load Image
Advertisement

விசாரணை வளையத்தில் அமைச்சர் உதயநிதி நண்பர்

Minister Udayanidhi is a friend in the investigation ring   விசாரணை வளையத்தில் அமைச்சர் உதயநிதி நண்பர்
ADVERTISEMENT
சென்னை: சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்து, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியின் நெருங்கிய நண்பரை, விசாரணை வளையத்திற்குள் அமலாக்கத் துறை அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர்.

சமீபத்தில், 'லைக்கா' சினிமா பட நிறுவனத்தில், அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, உதயநிதி அறக்கட்டளைக்கு நன்கொடை என்ற பெயரில் பணம் கைமாறி இருப்பதற்கான ஆவணங்கள் சிக்கின.

பின், அறக்கட்டளைக்கு சொந்தமான, 36.30 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்கினர். வங்கி இருப்பில் இருந்த, 34.70 லட்சம் ரூபாயையும் முடக்கினர். ஆனால், அறக்கட்டளை நிர்வாகி பாபு, 'சட்ட விரோத பண பரிமாற்றமே நடக்கவில்லை' என மறுத்துள்ளார்.
Latest Tamil News
இது குறித்து, அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறியதாவது: உதயநிதி அறக்கட்டளை அலுவலகத்தில், 12 மணி நேரம் நடத்திய சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கி உள்ளன. அதன் அடிப்படையில் தான், சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளன.

சட்ட விரோத பண பரிமாற்றத்தின் பின்னணியில், உதயநிதியின் நிழல் போல் செயல்படும் நெருங்கிய நண்பர் இருப்பது தெரியவந்துள்ளது. இவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளோம். சென்னையைச் சேர்ந்த இந்த நபரின் வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.


வாசகர் கருத்து (16)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அந்த 'நண்பருக்கு' சித்திர குப்தன் ஓலையைத் தேட ஆரம்பித்திருப்பார் 'குடும்ப பிரசனையால்' தற்கொலை செய்விக்கப்படுவார் வாக்கிங் வழக்கத்தை நிறுத்திக்கொள்ளவது நல்லது

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    Sadik 😭 ramesh😭, யார் பெத்த புள்ளயோ பாவம்

  • ராஜா -

    அந்த நண்பர் பெயர் சாதிக் பாட்சா இல்லையே..?

  • mrsethuraman - Bangalore,இந்தியா

    நண்பேன்டா

  • sridhar - Dar Es Salaam ,தான்சானியா

    ஒன்னும் பிரச்னை இல்லே பாஸ் முப்பதாயிரம் கோடியில் முப்பத்திஆறு கோடி தான் பாக்கி இருக்கே இன்னும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்