உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:
அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, குமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தி.மு.க.,வில், ஒரு கால கட்டத்தில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர் வைகோ; அவரின் பேச்சை கேட்கவே பெரிய அளவில் கூட்டம் சேரும்.
அப்படிப்பட்ட வைகோ, தி.மு.க.,வானது கருணாநிதியின் சொத்தாகி போனதும், வாரிசு அரசியலை அவர் ஊக்கப்படுத்துகிறார் என்பதை அறிந்ததும், அக்கட்சி உடனான உறவை முறித்து, ம.தி.மு.க., என்ற தனிக்கட்சியை துவக்கினார். அந்த தருணத்தில், தன் பின்னால் வந்த கூட்டத்தை நம்பி, அடுத்த முதல்வர் நாமே என்றும் நம்பினார்.
அதுமட்டுமின்றி, ஒரு காலகட்டத்தில், தி.மு.க.,வுக்கு எதிராக அரசியல் செய்ய, சிறிய கட்சிகளோடு கூட்டணி சேர்ந்து, அதன் வாயிலாகவும் செல்லாக் காசானார். இனி அரசியலில் பிழைக்க வழி என்ன என்று யோசித்ததால், தன்னை நம்பி வந்தவர்களை, இளிச்சவாயர்களாக எண்ணி, தி.மு.க., உடன் கூட்டணி அமைத்தார்.

'ஸ்டாலின், தமிழக முதல்வராகக் கூடாது' என, ஒரு காலகட்டத்தில் கொதித்தவர், 'அவர் முதல்வராக உழைப்பேன்...' என்று பேசியதன் வாயிலாக, கொஞ்சம் கொஞ்சமாக மக்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் இழந்தார்.
'தமிழகம் இவராலே உயரும்' என, மலையாக நம்பிய சிலர், வைகோவுக்காக உயிர் தியாகம் செய்தனர். அந்த அப்பாவிகளுக்கு, போதிய அரசியல் ஞானம் இல்லை என்றே சொல்லலாம்; இல்லையெனில், உயிரை விட்டிருக்க மாட்டார்கள்.
தன்னை நம்பி உயிரை கொடுத்தவர்களின் தியாகத்தை அவமதித்த வைகோ, இப்போது, கட்சியை தன் மகனிடமே ஒப்படைக்க முற்பட்டுள்ளதால், வாரிசு அரசியலை வளர்ப்பதில், கருணாநிதியும், தானும் ஒன்றே என்பதை நிரூபித்து விட்டார்.
'தமிழன் தமிழன்' என்று கூறி ஏமாற்றி வரும் வைகோவை நம்புவோர் இருக்கும் வரை, ம.தி.மு.க., என்ற கட்சி பெயரளவில் தொடரும்; அதன்பின், கடலில் இட்ட பெருங்காயமாக காணாமல் போகும்!
வாசகர் கருத்து (32)
வெங்காய ராமசாமியின் போதனையில் போதைக்கு அடிமையாகி, திராவிடத்தை எடுத்துக்கொண்டு, மேலே முன்னேற முடியாமல் திண்டாடி, திமுகவை விட்டு விலகி, அதிமுகவில் சந்தர்ப்பம் தேடி ஒன்றும் கிடைக்காமல், மடையர் திமுகவைத் தொடங்கி, உளறிக்கொட்டி, எதைப்பிடித்தால் மேலே வரலாம் என்று திணறி, ஈழப் பிரச்சனையைக் கையில் எடுத்துக்கொண்டு, கொடி பிடித்து முழங்கி, அங்கும் எல்லாவற்றையும் கடலில் உப்பைக் கலந்து போல ஆகி, முதலில் சுடலைக்கு அறிவில்லை என்று முழங்கி, பின்னால் சுடலையை முதலமைச்சர் ஆக்கியே தீருவேன் என்று வசனம் பேசி, பரம்பரை அரசியலை கண்டனம் செய்துகொண்டே மகனை தனது பதவியில் அமர்த்தி, இன்று பெருங்காயம் அரைத்து காலத்தை வீணாக்கிய வரலாறு படைத்திருக்கிறார் வைகோ. இவரால் யாருக்குப் பயன் என்று கேட்டு விடாதீர்கள். அவருக்கே அதை பற்றித் தெரியாது.
இவர் தனி கட்சி தொடங்கி தமிழ் மக்களுக்கும் தமிழக அரசியலுக்கும் செய்த நன்மைகளை விட கெடுதல் தான் அதிகம். பருத்தி மூட்டை கோடவுன்லேயே இருந்திருக்கலாம்
இந்த விஷயத்தில் துரைமுருகன் கெட்டிக்காரர். இன்பநிதி கட்சி தலைவராகவும், முதல்வராகவும் வந்தால் கூட அவரின் கீழ் பணிபுரிய துரைமுருகன் தயாராக இருப்பார். மனதுக்குள் வருத்தம் இருந்தாலும் , வருமானம் போய்விடுமே என்ற கலக்கம் செய்யும் செயல் அது.
லட்சிய வீரர் என்றுதான் நாம் நம்பினோம் . ஆனால் பணத்திற்காக உருமாறி போனது வருத்தமளிக்கிறது . கருணாநிதி வாரிசு அரசியல் செய்கிறார் என்றும் , ஸ்டாலினுக்கு ஒன்றும் தெரியாது என்றும் சாடி ஒரு கட்சியை உருவாக்கி , அந்த கட்சியை அரியணையில் ஏற்ற ஏதும் செய்யாமல் இப்படி அடிமையாகிபோனதை ஜீரணிக்க முடியவில்லை .
தூத்துக்குடி ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவின் தாமிர உற்பத்தியின் பெரும் பங்கு வகித்தது. சுற்றுச்சூழல் என்பதை காரணமாக கொண்டு மக்களை உசுப்பிவிட்டு பல வருடங்களாக போராட்டம் நடத்தி வெற்றிகரமாக இயங்கி கொண்டு இருந்த அந்த தொழிற்சாலையை இழுத்து பூட்டியாச்சி. அந்த கான்டராக்ட் லம்பாக ஒரு சீன கம்பெனிக்கு போயிடிச்சு. அந்த கம்பெனி இங்குட்டு நிறைய எலும்புத்துண்டுகள் வீசியது. அதுக்கு இங்கு சைக்கோக்களின் வாலாட்டல்கள் இருந்தது.