ADVERTISEMENT
ராமேஸ்வரம் :ராமேஸ்வரம் அருகே மண்டபம் கடலில் கடத்தல்காரர்கள் வீசிய, 20.20 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளை, மூன்று நாள் தேடுதல் வேட்டைக்கு பின் இந்திய கடலோர காவல் படை வீரர்கள் மீட்டனர். இதில், 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் இருந்து மே, 30ல் இரு நாட்டு படகில், தங்கக் கட்டிகளை ராமேஸ்வரம் அருகே மண்டபம் வேதாளைக்கு கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு தகவல் கிடைத்தது.
ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை ரோந்து கப்பல் மூலம் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் மன்னார் வளைகுடா கடலில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அவர்களை கண்டதும் ஒரு படகில் இருந்த கடத்தல்காரர்கள் தங்கக் கட்டிகளை மன்னார் வளைகுடா கடலில் உள்ள மனோலி தீவு அருகே கடலில் வீசினர். மற்றொரு படகில் இருந்த கடத்தல்காரர்கள் தங்கக் கட்டிகளுடன் வேதாளை கிராமத்தில் புகுந்தனர்.
சுதாரித்த புலனாய்வு துறையினர், கடத்தல்காரர்களான மண்டபம் வேதாளையைச் சேர்ந்த முகமது நாசர், 35, உட்பட ஐந்து பேரை கைது செய்து விசாரித்தனர்.
தொடர்ந்து மூன்று நாட்கள் கடலுக்குள் கடலோர காவல் படையின், 'ஸ்கூபா டைவிங் 'வீரர்கள் தங்கக் கட்டிகளை தேடினர். இதில், ஒரு படகில் இருந்து வீசிய, 11.6 கிலோ தங்கக் கட்டியை எடுத்தனர்.
மற்றொரு படகில் கொண்டு வந்த, 21.27 கிலோ தங்க பிஸ்கட்டுகளை வேதாளை கிராமத்தில் பதுக்கி வைத்திருந்தனர். இவற்றை மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்தனர்.
மூன்று நாள் தேடுதல் வேட்டையில் மத்திய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு படையினர் 32.87 கிலோ தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு, 20. 20 கோடி ரூபாய்.
பிப்., 9ல் மண்டபம் கடலில் வீசிய, 18 கிலோ தங்க கட்டிகள், தற்போது, 32 கிலோ தங்கக் கட்டிகள் என, நான்கு மாதத்தில், 50 கிலோ தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
வாசகர் கருத்து (6)
இனிய மார்கத்தில் இதுவும் ஒரு பாடம்
அது எப்டீங்க, இதுமாதிரி கடத்தல் வேலை செய்பவர்கள் எல்லாருமே ஒரு குறிப்பிட்ட இனத்தை சார்ந்தவர்களாக இருக்காங்க?
இதுக்கு தான் பிணராயி கப்பல் உடறாரு, மார்க்கம் இனி கவலை வேண்டாம்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
பொய்புரட்டு குண்டுபுறம் மதுரை வகையறாக்கள் வாய்கிழிய ஹிந்துக்கள் & மற்றவிஷயங்களை ஆராய்வார்கள்.. அவர்களின் முக்கிய கடத்தல் செய்திகளில் பம்மிக்கிட்டு ஓடி ஒளிவது தான் அவர்களின் வேடிக்கையான வாடிக்கை