ADVERTISEMENT
புதுச்சேரி:புதுச்சேரியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், தாம்பூலத்துடன் மது பாட்டில் சேர்த்து வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரி என்றாலே நினைவுக்கு வருவது மது. அந்தளவிற்கு திரும்பிய பக்கமெல்லாம் மதுக்கடைகளும், பார்களும் வியாபித்துள்ளன.
சுற்றுலாவை மேம்படுத்த, 'ரெஸ்டோ பார்'களுக்கு அரசு அனுமதி வழங்கி வருகிறது. இவற்றால் கலாசாரம் சீரழிவதாக, அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், புதுச்சேரி, சின்ன மார்க்கெட் அருகில் உள்ள திருமண மண்டபத்தில், சென்னையைச் சேர்ந்த மணமகனுக்கும், புதுச்சேரியைச் சேர்ந்த மணமகளுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது.
இதில் பங்கேற்ற ஆண்களுக்கு வழக்கமான தாம்பூல பையுடன், குவார்ட்டர் மது பாட்டில் தனி பையில் போட்டு வழங்கப்பட்டது. அதைக்கண்டு குஷியான குடிமகன்கள், கூடுதல் பாட்டில்களை கேட்டு வாங்கிச் சென்றனர்.
இந்த செயல், நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெண்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பெண்கள் பலர் தாம்பூலம் வாங்காமல் சென்றனர். திருமண நிகழ்ச்சியில் மது வழங்கும் புது கலாசாரம், சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி கலால் சட்டத்தின் படி, தனி நபர் ஒருவர் நான்கரை லிட்டர் மதுபானம், 9 லிட்டர் பீர் வைத்திருக்கலாம். அதற்கு மேல் வைத்திருந்தால் சட்டவிரோதம்.
இதன்படி, திருமணம் மண்டபத்தில் நடந்த மது வினியோகம் சட்ட விரோதமாகும்.
அதனால், கலால் சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய உள்ளதாக, கலால் துறையினர் தெரிவித்தனர்.

வாசகர் கருத்து (5)
What a Tremendous Transformation ??? ....
பாத்துக்கங்க!!! இங்கே மதுக்கடையை மூடச் சொல்லி சங்கிகள் அட்டகாசம் பண்றாங்க!! ஆனா புதுச்சேரியிலே இப்படி திருமணத்தில் மது சப்ளை.இங்கே எப்படி குதிச்சாங்க சங்கிக!!! கேடு கெட்டவுங்க!!
புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி இருப்பதாக நினைவு.
விருந்து மருந்து .....வருந்து
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
நல்லது .. கலாச்சரத்தை கெடுத்து குட்டிச்சுவர் ஆகும் அரசியல்வாதிகள் மற்றும் அவர்களை சுற்றியுள்ளவர்கள் . இவர்களை பிடித்து சிறைச்சாலையில் அடையுங்கள்