ADVERTISEMENT
திருவனந்தபுரம் கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்ததாக பாலியல் புகாரில் சிக்கிய, கேரளாவைச் சேர்ந்த பிஷப் பிரான்கோ முலக்கல், பஞ்சாப் மாநிலம் ஜலந்தரின் பிஷப் பதவியை ராஜினாமா செய்தார்.
கேரளாவைச் சேர்ந்த பிரான்கோ முலக்கல், ஜலந்தரின் பிஷப்பாக இருந்தார்.
கேரளாவுக்கு வந்தபோது, தன்னை பலமுறை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக, கன்னியாஸ்திரி ஒருவர் புகார் கொடுத்தார்.
இதையடுத்து, பிஷப் பதவியில் இருந்து, 2018ல் அவர் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த கேரள நீதிமன்றம், பிஷப் முலக்கல் நிரபராதி என்று தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து, அந்த கன்னியாஸ்திரி, கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த ஜனவரியில் கிறிஸ்துவர்களின் தலைவரான போப் பிரான்சிஸை, முலக்கல் நேரில் சந்தித்தார்.
அப்போது, ஜலந்தருக்கு புதிய பிஷப் நியமிக்கும் வகையில், தன் பதவியை ராஜினாமா செய்யும்படி அவர் அறிவுறுத்தியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜலந்தர் பிஷப் பதவியை முலக்கல் நேற்று ராஜினாமா செய்தார்.
வாசகர் கருத்து (7)
ஆனா தமிழக வைரமுத்து இன்னமும் மன்னிப்பு கூட கேக்க மாட்டாரு
சாமியார்களைஎப்படி நம்புவது...?சவாலான பக்தி மார்க்கம்
கடவுள் நல்லவர்களை சோதிப்பான் ஆனா கைவிடமாட்டான்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
கிருத்துவ உலகத்துக்கு நல்ல செய்தி. இனி பெண்களை கன்னியஸ்திரி போன்ற தன்னலமற்ற சேவைக்கு நம்பி அனுப்புவார்கள். மற்ற மதத்தினர் கிருத்துவர்களுக்கு எதிரானவர்கள் என்ற போர்வையை உண்டாக்கி எதிர்கட்சிகள் உருவாக்கி குளிர்காய்ந்து வருகின்றனர். ஆனால், கிருத்துவர்கள் தைரியமாக கேட்க முடியாத பிரச்சனைகளை எதிர்த்து மற்ற மதத்தினர் போராடி, உண்மைக்கிருத்துவர்களுக்கு எப்பவும் உதவியாக இருப்போம், அதன் பலன் தான் மூலக்கல் ராஜினாமா. இந்திய தண்டனைச்சட்டப்படி மதத்தை பரப்புவது குற்றமாகும், சட்டவிரோதம், எனவே உபி மாதிரி தமிழகத்தில், பைபிளை வைத்து பணம் சம்பாதிக்கவேண்டும் சுயலாபத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட சட்டவிரோதமாக இயங்கும் சர்ச்களை எப்ப இடிக்க ஜப்பானிலிருந்து புல்டோசர்கள் வரும்? எப்ப ஜார்ஜ் பொன்னைய்யா பட்டத்துல இருந்து இறங்குவாரு ?