இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவர் பிரிஜ் பூஷன் மீது, மல்யுத்த வீராங்கனையர் சிலர் பாலியல் புகார் கூறியுள்ளனர்.
பா.ஜ., - எம்.பி.,யாகவும் உள்ள அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மல்யுத்த வீரர்கள், வீராங்கனையர், ஒரு மாதத்துக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்துக்கு விவசாயிகள் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
பாரதிய விவசாயிகள் சங்கத் தலைவர் நரேஷ் திகாயத் தலைமையில், 'காப் மஹாபஞ்சாயத்' எனப்படும் சமூகக் குழுவின் ஆலோசனை கூட்டம், உத்தர பிரதேசத்தின் முஜாபர்நகரில் நேற்று நடந்தது.
இதில், இந்த விவகாரம் தொடர்பாக, ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து முறையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. காப் மஹாபஞ்சாயத் இன்றும் நடக்க உள்ளது.
இளைஞர் நலம், விளையாட்டு துறைக்கான பார்லிமென்ட் நிலைக் குழு கூட்டம், பா.ஜ.,வைச் சேர்ந்த விவேக் தாக்குர் தலைமையில் புதுடில்லியில் நடந்தது. இக்கூட்டத்தில், 'மல்யுத்த வீரர்கள் போராட்டம் குறித்து இதில் விவாதிக்க வேண்டும்' என, திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த சுஷ்மிதா தேவ், அதிக் குமார் மால் வலியுறுத்தியுள்ளனர். ஆனால், அது நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
வாசகர் கருத்து (6)
நாங்கள் வைத்ததுதான் சட்டம் என்று ஜனாதிபதியிடம் சொல்லப்போகிறார்களோ?
நல்லவேளை நமது இந்திய ஜனாதிபதியை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். அமெரிக்க ஜனாதிபதியிடம் என கூறவில்லை. ஒரு அமைப்பாக மக்களை திரட்டினால் அரசுக்கு எதிராகவும் அரசு திட்டங்களுக்கு எதிராகவும் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் போராடலாம் என்ற புதிய நிலை நாட்டில் உருவாக்கி உள்ளது. அதுவும் பா ஜ க, மோடியை எதிர்ப்பதென்றால் எந்தவேளை வெட்டியும் இல்லமால் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் போராட அணைத்து உதவிகளையும் செய்ய பல அமைப்புகள் ரெடியாய் உள்ளன. போராட்டத்திற்கு ஆதரவுக்கு தர பல அரசியல் தலைவர்களும் ரெடி. ஏனென்றால் இது ஜனநாயக நாடு. போராடுவது எங்கள் உரிமை. அதனால் அதைமட்டுமே செய்வோம். சட்டங்கள், காவல்துறை, நீதிமன்றம் போன்ற எதிலும் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. நாங்கள் சொல்வதை அவைகள் எல்லோரும் கேட்க வேண்டும். நாம் எங்கேபோய்க்கொண்டுள்ளோம் என்பதாவது அவர்களுக்கு புரிகின்றதா இல்லையா என சந்தேகமாக உள்ளது. ஆமாம் அதுயென்ன வேறு எந்த நல்ல காரணங்களும் கிடைக்கவில்லையென்ற பாலியல் கொடுமை குற்றசாட்டு? அதுவும் எத்தனை வருடம் கழித்து? போன்ற பல சந்தேகங்கள் வருகின்றது. குற்றச்சாட்டில் உண்மை உள்ளதா? ஆதாரங்கள் உள்ளதா என விசாரிக்க கூட வேண்டாமா?
சதி கார கூட்டம் ஒன்று இணைந்து விட்டதே...
இந்திய மல்யுத்த வீராங்கனைகளை பற்றி அமெரிக்காவில் ராகுல் பேசினா இந்தியாவின் மானம் என்னாவது? இதற்க்கு பயந்தாவது அரசு விரைந்து குற்றவாளிகளை கைது செய்யணும்
Paralogam Americans knows everything and brilliant so they will vote for cong in 2024 to become US president